செய்திகள்தமிழ் செய்திகள்

550 -கோடி ரூபாயில் தயாரான “2.0 தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ஜெயிக்கும்…” – ரஜினியின் அதிரடி பேச்சு..!

550 -கோடி ரூபாயில் தயாரான “2.0 தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ஜெயிக்கும்…” – ரஜினியின் அதிரடி பேச்சு..!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்ப ர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக  பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியிருக்கிறது.  இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சத்யம் தியேட்டரில் 3-11-2018அன்று காலை நடைபெற்றது.

இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, கலை இயக்குநர் முத்துராஜ், படத் தயாரிப்பாளர் தாணு, மற்றும்சினிமா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

விழாவில்  ரஜினிகாந்த் பேசும்போது, “இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. 7, 8 டேக்கெல்லாம் வாங்க ஆரம்பித்தேன். இது எனக்கு பயத்தைக் கொடுத்தது. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாக சொன்னேன்.

ஆனால், ஷங்கர் விடவில்லை. ‘நீங்கதான் நடிக்கணும். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நீங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக் கொள்கிறேன். இப்போது நீங்கள் இல்லாத காட்சிகளை எடுத்துக் கொள்கிறேன்..’ என்றார்.

அப்படியும் எனக்கு திருப்தியாகவில்லை. அப்போது ஒரு நாள் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் என்னை பார்க்க வந்தார். அவரிடமும் நான் இதையேதான் சொன்னேன். உடனே அவர் உடன் வந்தவர்களையெல்லாம் அறையைவிட்டு வெளியேறச் சொல்லிவிட்டு என் கையைப் பிடித்துக் கொண்டு ‘இந்தப் படம் எனக்கு முக்கியமே இல்லை.. நீங்கள்தான் எனக்கு முக்கியம். உடம்பை சரியாக்கிட்டு வாங்க.. எத்தனை வருஷமானாலும் நான் காத்திருக்கிறேன்..’ என்றார். இவரை போன்ற ஒரு நல்ல நண்பரை பார்ப்பது கடினம். சுபாஷ்கரன் கோஹினூர் வைரம் மாதிரி..!

முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜட்டில் துவங்கியது. கடைசியில் 550 கோடியில் வந்து நின்றது. கண்டிப்பாக அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை படம் ஈட்டும். இப்போது தவிர்க்க முடியாத படமாக 2.0 மாறியிருக்கிறது.

எப்போது வரணும் என்பது முக்கியமல்ல. வெற்றி பெறுவதுதான் முக்கியம். லேட் ஆனாலும் கரெக்டா வரணும். வந்தாலும் சொல்லியடிக்கணும்.. இந்தப் படம் நிச்சயமா ஜெயிக்கும்.. இங்கே இந்தப் படம் ஜெயிக்க வேண்டும் என்று வாழ்த்து கூறிய எனது நண்பர் கமல்ஹாசனுடன் ஷங்கர் செய்யப் போகும் ‘இந்தியன் -2’ படமும் மாபெரும் வெற்றியைப் பெரும்… என்றார்.

இயக்குநர் ஷங்கர் பேசும்போது, “2.O திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்சய் குமார் இருவரும் கடுமையாக உழைத்துள்ளனர். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமாக்ஸ் காட்சிக்காக டெல்லிக்கு வந்து நடித்துக் கொடுத்தார் ரஜினி. நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது..” என்றார்.

விழாவில் இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் பேசும்போது, “ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரது கடின உழைப்பு இந்த வயதிலும்கூட. அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசினார்.

விழாவில் அக்‌ஷய் குமார் பேசும்போது, “ரஜினி மற்றும் இயக்குநர் ஷங்கர் உடன் 2.0 படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி…என நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் பேசினார்.”

விழாவில் எமி ஜாக்சன்  பேசும்போது, “இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த ஷங்கர் அவர்களுக்கு நன்றி..” என்றார்.

சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி பேசும்போது, “இவ்வளவு பெரிய படத்தில் பணிபுரிந்து மிகவும் சந்தோசமாக உள்ளது. இயக்குனர் ஷங்கர், ரஜினி சார், அக்சய் சார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்…” என பேசினார்.

விழாவில் கிராபிக்ஸ் டிஸைனர் ஸ்ரீநிவாசன் மூர்த்தி பேசும்போது, “மூன்று வருடத்திற்கு மேலான உழைப்பு இப்படம். இப்படத்தில் நிறைய தொழில் நுட்பங்களை பயன்படுத்தியுள்ளோம். எனது டீம் முழு ஒத்துழைப்பு கொடுத்ததினால் இந்தப் படத்தின் vfx காட்சிகள் மிக அருமையான  வந்துள்ளன. இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த ஷங்கர் சார் அவர்களுக்கு நன்றி…” என பேசினார்.
விழாவில் கலை இயக்குனர் முத்துராஜ் பேசியவை ” மிகவும் சந்தோசமாக உள்ளது.ரஜினி சார் ரசிகனாக இருந்து அவர் படத்துலயே வேலை பார்ப்பது.ஷங்கர் அவர்களுக்கும்,தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்களுக்கும்,படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி என பேசினார்.

விழாவில் படத்தொகுப்பாளர் ஆன்டனி பேசியவை ” வாய்ப்பளித்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கும் சுபாஷ்கரன் அவர்களுக்கும் நன்றி.இந்திய சினிமாவில் மிகப்பெரிய படம்.அனைவருக்கும் நன்றி ” என பேசினார்.

 

 

Tags
Show More

18 Comments

 1. What’s up every one, here every one is sharing these kinds of knowledge, therefore it’s nice to
  read this weblog, and I used to pay a visit this blog
  every day.

 2. Thanks for finally talking about >550 -கோடி ரூபாயில் தயாரான “2.0 தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ஜெயிக்கும்…”
  – ரஜினியின் அதிரடி பேச்சு..!
  – Cinemapokkisham <Loved it!

 3. I’ve been exploring for a little bit for any high quality articles or weblog posts on this sort of area
  . Exploring in Yahoo I ultimately stumbled upon this web site.
  Studying this information So i’m happy to express that I’ve a
  very excellent uncanny feeling I came upon exactly what I needed.
  I most certainly will make certain to don?t overlook this
  site and provides it a glance on a relentless basis.

 4. Its like you read my mind! You seem to know a lot about this, like you wrote the book in it or something.
  I think that you can do with a few pics to drive the message
  home a bit, but instead of that, this is great blog. A fantastic read.
  I will definitely be back.

 5. Howdy just wanted to give you a quick heads up. The text in your post seem to be running off the screen in Safari.
  I’m not sure if this is a formatting issue or something to do
  with internet browser compatibility but I thought I’d post to let you know.
  The style and design look great though! Hope you get the issue resolved
  soon. Cheers

 6. Hmm is anyone else having problems with the images on this blog loading?
  I’m trying to determine if its a problem on my end or if it’s the blog.
  Any feed-back would be greatly appreciated.

 7. Please let me know if you’re looking for a article writer for your blog.
  You have some really good articles and I think I would
  be a good asset. If you ever want to take some of the load off, I’d really
  like to write some material for your blog in exchange for a link back to mine.
  Please shoot me an email if interested. Thanks!

 8. It is perfect time to make some plans for the longer term and it is
  time to be happy. I’ve learn this put up and if I
  may just I wish to counsel you few fascinating issues or tips.
  Perhaps you could write subsequent articles relating to this article.

  I desire to learn more issues approximately it!

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close