செய்திகள்தமிழ் செய்திகள்நிகழ்வுகள்

நடிகர் ஏ.ஆர்.எஸ்.எழுதிய “தித்திக்கும் நினைவுகள்” -நூல் வெளியீட்டு விழா..!!

     நடிகர் ஏ.ஆர்.எஸ்.எழுதிய “தித்திக்கும் நினைவுகள்” -நூல் வெளியீட்டு விழா..!!

 

பிரபல திரைப்பட நடிகர் ஏ.ஆர்.எஸ். என்கிற ஏ.ஆர்..சீனிவாசன் அவர்கள் தனது மேடைநாடக, திரையுலக அனுபவத்தினை “அமுதசுரபி” மாத இதழில் தொடராக எழுதியதை தொகுத்து “தித்திக்கும் நினைவுகள்” எனும் தலைப்பில் நூலாக்கி சமீபத்தில் வெளியிட்டார். ,சென்னை ஸ்ரீகிருஷ்ணா கான சபாவில் நடந்த விழாவில் பிரபல கர்நாடகப் பாடகி திருமதி காயத்ரி கிரீஷ் அவர்களின் இறை வணக்கத்துடன் விழா துவங்கியது.நூலினை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் வெளியிட முதல் பிரதியை “அமுதசுரபி” மாத இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

நூலைப் பற்றியும் ,ஏ.ஆர்.எஸ்.அவர்களையும் பாராட்டி நடிகர்கள் சார்லி,மாது பாலாஜி,சின்னத்திரை இயக்குநரும் எழுத்தாளருமான வெங்கட் ஆகியோர்கள் பேசினார்கள்..இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு இயக்குநர் எஸ். பி.முத்துராமன்,பிரபல நடிகைகள் சச்சு,ராஜஸ்ரீ,காஞ்சனா,
காத்தாடி ராமமூர்த்தி,டிவி.வரதராஜன்,காந்தன்,பக்தி சரண்,பிரபல கல்வியாளர் திருமதி.ஒய்.ஜி.பி.,வீணை வித்வான் திருமதி.ரேவதி கிருஷ்ணா,எஸ்.வி..ரமணன்.,முத்ரா பாஸ்கர்,,ஸ்ரீமதி முத்ரா ராதா…மற்றும் ஏராளமான மேடைநாடகக் கலைஞர்கள் ,,திரையுலகினர்கள்,எழுத்தாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.நிகழ்ச்சியினை சி.வி.சந்திரமோகன் தொகுத்து வழங்கினார்.
ஏ.ஆர். எஸ்.அவர்களின் புதல்வர் ஜெய் அவர்கள் நன்றியுரையாற்றினார்.விழாவிற்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர் மேஜர்தாசன்,ரமணி,கடையம் ராஜு ஆகியோர்கள் வரவேற்றார்கள்.

அபூர்வமான புகைப்படங்கள்…தகவல்களுடன் (Page-296)வெளிவந்திருக்கும்
இந்நூலினை பெற விரும்புவோர்..{{விலை
-200-ரூபாய்)
…ஏ.ஆர்.ஸ்ரீனிவாசன்,15(old )37(New )–சாரங்கபாணி தெரு
,தி.நகர்-,சென்னை-600017-cell-9840026823….தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

Tags
Show More
Back to top button
Close