நடிகர் அருண்விஜய்க்கு உடற்பயிற்சி செய்யும் போது விபத்து..!!(வீடியோ இணைப்பு)

நடிகர் அருண்விஜய்க்கு உடற்பயிற்சி செய்யும் போது விபத்து..!!(வீடியோ இணைப்பு)

நடிகர் அருண்விஜய்க்கு உடற்பயிற்சி செய்யும் போது விபத்து..!!(வீடியோ இணைப்பு)

மாஃபியா படத்திற்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’, ‘சினம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுகிறார்.

பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ”எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மிஷினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நான் கிழே விழுந்த சமயத்தில் இருந்து சரியாக ஒரு வாரத்திற்கு காலில் வீக்கம் இருந்தது. நல்லவேளை என் தலையில் அடிபடவில்லை. கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்” என்று ரசிகர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS