செய்திகள்தமிழ் செய்திகள்

`நடிகையர் திலகம்’ படம் பார்த்து விட்டு ஜெமினிமகள் டாக்டர்.கமலா செல்வராஜ் அதிர்ச்சி…ஆத்திரம்..!!

`நடிகையர் திலகம்’ படம் பார்த்து விட்டு ஜெமினிமகள் டாக்டர்.கமலா செல்வராஜ் அதிர்ச்சி…ஆத்திரம்..!!

இந்தப் படத்தில் அப்பா எந்த வேலையும் செய்யாத மாதிரியும் அவரை ஒரு எடுபிடி மாதிரியும் காட்டியிருக்காங்க. அந்த நேரத்தில் அப்பாவும் ஒரு பிஸி ஆர்ட்டிஸ்ட். இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அப்புறம் ஏன் அப்படி காட்சி வெச்சாங்க?  அப்பாவின் முதல் காதலே சாவித்திரி மேல வந்ததா காட்டியிருக்காங்க. ஆனா அதுக்கு முன்னாடி அப்பா எங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணியிருந்தார். அவர் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா. அப்போ எங்க அம்மா மேல எந்தவித காதலும் இல்லாமதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரா? 

அப்பாதான் சாவித்திரிக்கு மதுப்பழக்கத்தை கத்துக்கொடுத்தார்னு படத்துல காட்டியிருக்கிறதைப் பார்த்துட்டு அதிர்ந்துட்டேன். சாவித்திரியை குடிக்கப் பழக்குற `குடிகாரர்’ மாதிரியில்ல இந்தப் படம் அவரை சித்திரிக்குது…..இந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டயிருந்து இதைப் பார்த்தாரா?(கோபம் அடங்காமல் ) எங்கப்பா டிரிங்க் பண்ணுவார். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அவர் சோஷியல் டிரிங்கர். பார்ட்டி, ஃபங்ஷன்னா மட்டும்தான் மது அருந்துவார். அவரைக் குடிகாரர் ரேஞ்சுக்கு காட்டினதை என்னால ஒத்துக்கவே முடியலை. இந்தப் படத்துல, அப்பாவை ரசிகர்கள் வெள்ளித்திரையில் ஏத்துக்கலைங்கிற மாதிரி காட்டியிருக்காங்க. இது எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம்…..அப்படி ஏத்துக்காமலா அவருக்குக் `காதல் மன்னன்’னு பட்டம் எல்லாம் கொடுத்துக் கொண்டாடினார்கள் .

`பிராப்தம்’ படம் எடுக்கிறப்ப, இவ்வளவு பெரிய நடிகை கஷ்டப்பட்டு படம் எடுக்கிறாங்களேனு யாராவது அதுல ஃப்ரீயா நடிச்சு கொடுத்தாங்களா என்ன… ?அப்பா அதைத் தடுத்தார். அவங்க வீட்டுக்கு நானும் அப்பாவும் போயிருந்தோம், அந்தப் படத்தை எடுக்க வேண்டாம்னு சொல்றதுக்காக…அப்போ ..சாவித்திரிமேம் . கூர்க்காகிட்ட சொல்லி , அவங்க வீட்டு நாயை விட்டு எங்களைத் துரத்தி அடிச்சாங்க .. பயத்துல கேட் ஏறி குதிச்சு நானும் அப்பாவும் வெளிய வந்தோம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் அப்பா அவங்க வீட்டுக்குப் போகவே இல்லை” .சாவித்திரிமேம் செஞ்ச அந்த சம்பவம் என் மனசுல இன்னும் வடு மாதிரி படிஞ்சிருக்கு.

சாவித்திரியைக் கொண்டாடி ஒரு படம் எடுத்திருக்காங்க. அவங்களோட நடிப்புக்கு மக்கள்கிட்ட நல்ல மரியாதை இருந்தது. அதை படத்துல அப்படியே காட்டியிருக்காங்க. அவங்க ரோலுக்கு கீர்த்தி சுரேஷ் கன கச்சிதமா பொருந்திப் போயிருக்காங்க. இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே இது ஒரு ஃபிக்‌ஷன்னுதான் போடுறாங்க. அதனால இந்தப் படத்துல வந்ததெல்லாம் எந்தளவுக்கு உண்மை, உண்மையில்லைன்னு படம் பார்க்கிற யாருக்கும் தெரியப் போறதில்லை” `யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு நல்ல மனிதரை அசிங்கப் படுத்திவிட்டார்கள் என்றார் ஆத்திரத்தோடும் …வேதனையோடும்.`டாக்டர்.கமலா செல்வராஜின் வேதனை நியாயமானதுதான்.

Tags
Show More

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close