நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்..!!

நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்..!!

நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்…!!

தமிழ் நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக 26-3-2020- அன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 37.

26-3-2020-அன்று இரவு சென்னையில் சேதுராமன் தன்னுடைய வீட்டில் இருக்கும் போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனே அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்குச் சிகிச்சை பலனின்றி இரவு 8:30 மணியளவில் காலமானார். .

டாக்டர் சேதுராமனுக்கு உமையாள் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதாவது நான்கு வருடங்களுக்கு முன்தான்  அவருக்கு திருமணம் ஆனது. தோல் மருத்துவரான இவர் எம்.பி.பி.எஸ், எம்.டி படித்ததோடு மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர். இவரிடம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தோல் சிகிச்சை பெற்று வந்தனர். சென்னை அண்ணாநகரில் கிளினிக் வைத்து நடத்தி வந்த சேதுராமனுக்கு நடிகர் சந்தானம் நெருங்கிய நண்பர் ஆவார். சேதுராமன் மறைவிற்கு சந்தானம் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் தங்கள் அதிர்ச்சியையும் இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சேதுராமன், அதன்பின்னர் ‘வாலிப ராஜா’, ‘சக்க போடு போடு ராஜா’ மற்றும் 50/50’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS