வக்கீலாக நடிக்கும் சூர்யா..!!

வக்கீலாக நடிக்கும் சூர்யா..!!

வக்கீலாக நடிக்கும் சூர்யா..!!

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் இதற்கிடையில் ஹரி இயக்கும் ‘அருவா’ படத்தில் சூர்யா நடிப்பார் என்ற அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாகவும், அவர்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS