புலம்பித் தள்ளிய யோகி பாபு..!!

புலம்பித் தள்ளிய யோகி பாபு..!!

புலம்பித் தள்ளிய யோகி பாபு..!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கு சமீபத்தில் ரகசிய திருமணம் நடந்துமுடிந்தது.

திருமணத்திற்கு யாரையும் அழைக்காத யோகிபாபு கூடிய விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் அதற்கான வேலையில் அழைக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

அதன்படி ஏப்ரல் 9ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள யோகிபாபு திரையுலகப் பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.

கேப்டன் விஜயகாந்த், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு யோகிபபு அழைப்பு விடுத்திருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருந்தன.

ஆனால் இந்தியா தற்போது இருக்கும் சூழலில் திட்டமிட்டபடி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது சந்தேகம்தான் போல என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புலம்பியுள்ளார் யோகிபாபு.

இதனை பார்த்த ரசிகர்கள் யோகிபாபுக்கு பலவித யோசனைகளை கூறி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS