பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை-2020- ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். அதன்படி வனிதா திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.