கொரோனாவை ஒழிக்க உதவிய  அஜித்!

கொரோனாவை ஒழிக்க உதவிய அஜித்!

கொரோனாவை ஒழிக்க உதவிய அஜித்! இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாலையில் தேவையில்லாமல் நடமாட யாருக்கும் அனுமதி இல்லை என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இருப்பினும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் மட்டும் தங்களுடைய பணியை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி

களை தெளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகளை தெளிக்கும் அளவுக்கு சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.இதனையடுத்து தற்போது ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  அஜித், ஐஐடி மாணவர்களுடன் இணைந்து உருவாக்கிய ட்ரோன்கள் தான் தற்போது கிருமிநாசினி தெளிக்க உதவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே கொரோனா வைரசை ஒழிக்க  அஜித்தின் பங்கும் இதில் இருக்கிறது என்பது  அஜித் ரசிகர்கள் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS