அழியாத கோலங்கள் 2=சினிமா விமர்சனம்..!!

அழியாத கோலங்கள் 2=சினிமா விமர்சனம்..!!

அழியாத கோலங்கள் 2=சினிமா விமர்சனம்..!!

எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள படம் ‘அழியாத கோலங்கள் 2’. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர். , ‘‘பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என பெயர் வைத்துள்ளார்கள்.. மற்றபடி அவர் இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் கதைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் படம் ஒரு வங்காளப் படத்தின் ரீமேக்காகும்.பிரகாஷ்ராஜ் ஒரு பிரபல எழுத்தாளர். அவர் சாகித்ய அகாடமி விருது வாங்கிய கையோடு தன்னுடைய முன்னாள் காதலி அர்ச்சனாவை சந்திக்க செல்கிறார். 25 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் காதலர்கள் பல்வேறு வி‌ஷயங்களை பேசிக்கொண்டு இரவை கழிக்கிறார்கள்.அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பிரகாஷ்ராஜ் இறந்து போகிறார். சமூகம், சட்டம், குடும்பம் அனைத்தும் அர்ச்சனாவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. அவரை சந்திக்க பிரகாஷ்ராஜின் மனைவியான ரேவதி வருகிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

. இந்தப் படம் வங்காளத்தில் பல விருதுகள் வாங்கி சாதனை படைத்தன. இந்தப் படத்தில் ஹீரோவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரேவதியும், காதலியாக அர்ச்சனாவும் நடித்துள்ளனர். .பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி மூவருமே போட்டி போட்டு நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பில் ஒவ்வொரு அசைவிலும் அவர்களது அனுபவமும் பக்குவமும் தெரிகிறது. நடிகை ஈஸ்வரிராவ் செய்தியாளராகவும், நடிகர் நாசர் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS