கேப்மாரி=சினிமா விமர்சனம்..!!

கேப்மாரி=சினிமா விமர்சனம்..!!

கேப்மாரி=சினிமா விமர்சனம்..!!

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியிருக்கும்
70-வது படம் “கேப்மாரி”. இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடி த்திருக்கிறார். இது அவரது 25-வது படமாகும். ஜெய்க்கு ஜோடியாக வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இக்கால ஐ.டிஇளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு காதல் கலந்த நகைச்சுவை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்….ஐ.டி. ஊழியரான ஜெய் ஊருக்கு செல்லும் போது, ரெயிலில் நாயகி வைபவியை சந்திக்கிறார். இந்த பயணத்தின் போது மது அருந்தும் ஜெய், வைபவியிடம் வேண்டுமா என்று கேட்க, அவரும் வேண்டும் என்று சொல்ல, இருவரும் மது அருந்தி போதையில் தவறு செய்து விடுகிறார்கள். அதன்பின் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள்.
சில மாதங்களுக்குப் பிறகு சென்னையில் சந்திக்கும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் அதுல்யாவின் வண்டி பஞ்சராக அவரை வீட்டில் கொண்டு விடுகிறார் ஜெய். அப்போது இருவரும் போதையில் தவறு செய்து விடுகிறார்கள்.அதுல்யா கர்ப்பமாக ஜெய் வீட்டுக்கே வந்து விடுகிறார். இதனால், ஜெய் – வைபவி – அதுல்யா இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் ஜெய் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய், அளவுக்கு அதிகமான
செக்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார். இரண்டு பெண்களிடம் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கும் காட்சியில் பளிச்சிடுகிறார். நாயகிகளாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, வைபவி இருவரும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும்…தண்ணி அடிப்பது வல்கராகப் பேசுவது…என இக்காலப் பெண்களை அளவுக்கு அதிகமாகவே கொச்சைப் படுத்தியுள்ளார் இயக்குநர்..சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் ஜீவனின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது மிகவும் கலர்புல்லாக இருக்கிறது.

இது வரையில் எந்த பெண்கள் அமைப்பும் இப்படத்திற்கு
எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போதுள்ள இளைஞர்களுக்கான ஒரு மட்டமான படத்தை கொடுத்திருக்கிறார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS