தபாங் 3 =சினிமா விமர்சனம்..!!

தபாங் 3 =சினிமா விமர்சனம்..!!

தபாங் 3 =சினிமா விமர்சனம்..!!

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” உருவாகியுள்ளது. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
. சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்துள்ளார். அர்பாஸ்கான், மாஹி கில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் வில்லன் வேடத்தில் ’நான் ஈ’ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.போலீஸ் அதிகாரியாக இருக்கும் சல்மான்கான், நேர்மையாகவும், ரவுடிகளிடம் இருந்து பறிக்கும் பணத்தை, போலீஸ்காரர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில், பெண்களை கட்டாயப்படுத்தி தவறான தொழிலை செய்யச் சொல்லும் கும்பலை அடித்து நொறுக்குகிறார் சல்மான்கான்.
இந்த கும்பலுக்கு தலைவனாக கிச்சா சுதீப் இருப்பது சல்மான்கானுக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே இருக்கும் பழைய பகை காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. சல்மானுக்கும், கிச்சா சுதீப்புக்கும் இடையே இருக்கும் பழைய பகை என்ன? இவர்களின் மோதல் எப்படி முடிவு பெற்றது என்பதே படத்தின் மீதிக்கதை.

சுல்புல் பாண்டேவாக நடித்திருக்கும் சல்மான்கான், நடை, உடல் மொழி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ப்ளாஷ்பேக்கில் சென்டிமென்ட்டாக நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். காமெடியிலும், சண்டைக்காட்சிகளிலும், செம்ம ஸ்கோர் செய்திருக்கிறார்.
சல்மான்கானுக்கு ஏற்ற வில்லனாக நடித்திருக்கிறார் கிச்சா சுதிப். தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். நாயகியாக வரும் சோனாக்‌ஷி சின்ஹா அழகு பதுமையாக வந்து செல்கிறார். மற்றொரு நாயகியாக வரும் சாய் மஞ்சிரேக்கர் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.தனக்கே உரிய ஸ்டைலில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா. ஆட்டம், பாட்டம், சண்டை, சென்டிமென்ட், பன்ச் வசனம் அனைத்தையும் திறம்பட கொடுத்திருக்கிறார். தமிழ் டப்பிங் வசனம் படத்திற்கு பலம். பல இடங்களில் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறது.
சாஜித் அலி இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். இவரின் பின்னணி இசையும், மகேஷ் லிமாயேயின் ஒளிப்பதிவோடு சேர்ந்து படத்தை பார்க்கும் போது கூடுதல் ரசனை.
மொத்தத்தில் ‘தபாங் 3’ -ராயல் சல்யூட்..!!

CATEGORIES
TAGS
Share This

COMMENTS