இயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..!!

இயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..!!

இயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு…!!

கொரோனா வைரஸ் தமிழ் பட உலகை புரட்டி போட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு ரத்து போன்ற காரணங்களால் திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது.

திரைக்கு வர தயாராக இருந்த 50 படங்கள் கொரோனாவால் வெளியாகவில்லை என்றும், இதன் மூலம் ரூ.500 கோடி முடங்கி இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.இந்நிலையில் இயக்குனர் ஹரி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியட்டுள்ளார். அதில், கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்குத் திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு நான் அடுத்ததாக இயக்கப் போகும் ‘அருவா’ திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS