துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குநர் மிஷ்கினா? விஷாலா?

துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குநர் மிஷ்கினா? விஷாலா?

துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குநர் மிஷ்கினா? விஷாலா?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.

இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி, ஆதித்யமேனன் ,முன்னா, நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தால் துப்பறிவாளன் படத்திற்காக மிஸ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் துப்பறிவாளன் படத்தில் இருந்து மிஷ்கின் தற்போது விலகியுள்ளதாகவும், மீதி உள்ள காட்சிகளை விஷால் இயக்க போவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்கவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS