மருமகனை முந்திக்கொண்ட மாமனார்..!!

மருமகனை முந்திக்கொண்ட மாமனார்..!!

முந்திக் கொண்ட மாமனார்..!!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்..பட்டாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 15-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.தனுஷின் மாமனார் ரஜினிகாந்த் தனது ‘தர்பார்’படத்தை ஒருவாரம் முன்னதாகவே
முந்திக் கொண்டு பொங்கல் விருந்தை
ரசிகர்களுக்கு படைத்து விட்டார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS