செய்திகள்தமிழ் செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ டீசர்..!!

1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ டீசர்…!!!

காமன்மேன் பிரசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’.

‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவி அரசுவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவிஅரசு, ஔிப்பதிவு- சரவணன் அபிமன்யு, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத் தொகுப்பு – A.M.ராஜா முகமது, கலை இயக்கம் – G.துரைராஜ், பாடல்கள் – ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், ஷோபி, சண்டை இயக்கம் – ராஜசேகர், மக்கள் தொடர்பு – கோபிநாதன். 

ஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

வெளியான சில மணி நேரங்களில் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர். தற்போது இந்த டீசரை 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

குறிப்பாக இந்த டீசரில் இடம் பெறும் “ஓடாத.. விழுந்துருவ’ன்னு சொல்றதுக்கு இங்கு ஆயிரம் பேர் இருக்காங்க. ஆனா, ‘விழுந்திராம ஓடு’ன்னு சொல்லுறதுக்கு இங்கு யாருமே இல்ல…” என்ற வசனம் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

இந்த டீசர் வெளியான பிறகு படம் பற்றிய ஆர்வத்தை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள், டிரைலர்கள் வெளியாகவுள்ளது. 

 

 

 

Tags
Show More

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close