நடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்..!!

நடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்..!!

நடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளார்கள். உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யும்படி அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கில் வெளியே நடைபயிற்சி செய்த நடிகையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.

அந்த நடிகையின் பெயர் ஆஞ்சல் குரானா. இவர் ஏராளமான இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். டெல்லியில் வசிக்கிறார். ஊரடங்கில் ஆஞ்சல் குரானா, தனது நாய் குட்டியுடன் வெறிச்சோடி கிடந்த சாலையில் நடைபயிற்சி செய்தார். சிறிது தூரம் சென்றதும் மூன்று தெருநாய்கள் அவரை சுற்றி வளைத்து குரைத்தன. திடீரென்று அந்த நாய்கள் அவர் மீது பாய்ந்து இடது பக்க இடுப்பு, வலது கால் முட்டியில் கடித்து குதறின.இதனால் அவர் அலறினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஊசி போடப்பட்டது. இதுகுறித்து ஆஞ்சல் குரானா கூறும்போது, “நான் நடைபயிற்சி செய்த போது ஊரடங்கால் சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் சுற்றி வளைத்து என்னை கடித்து விட்டன” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS