செய்திகள்தமிழ் செய்திகள்

விஷாலின் மனிதாபிமானம்..!!

விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கிய விஷால்..!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” சண்டக்கோழி 2  “ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ‘விஷால் 25 விழா’ 24-9-2018 அன்று திங்கள்கிழமை நடைபெற்றது. விழவிற்கு  திரைஉலகமே திரண்டு வந்து அவரை வாழ்த்தியது. 25 படங்களை அவர் எப்படியெல்லாம் கடந்து வந்தார் என்பதை வீடியோ க்ளிப்பிங்ஸ் மூலமாகக் காண்பித்தார்கள்,இதில் பாடல் காட்சிகள்,சண்டை க்காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்தது.

சண்டைக் காட்சிகளின்  போது அவருக்கு ஏறப்படும் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள்,போன்றவைகள் அடிக்கடி நடப்பதையும்…அதற்கு உடனடியாகமருத்துவம் செய்து அவருக்கு தையல்களைப் போட்டு குணமாக்கி மீண்டும் படப்பிடிப்பிற்கு அனுப்பி வைக்கும் மருத்துவர் திரு.நந்தகுமார் சுந்தரம் அவர்களை அழைத்து அவரை கௌரவித்தவிதமும்…நடன மாஸ்டர்கள்,சண்டைப் பயிற்சி மாஸ்டர்கள் ஆகியோர்களை அழைத்து விஷால் கௌரவித்தவிதமும் பாராட்டும் படியாக இருந்தது.
இவற்றையெல்லாம் விட மனிதாபிமானத்தோடு 30 -விவசாயிகளை மேடையில் கௌரவித்தவிதம் எல்லோரையும் மெய் மறக்கச் செய்து விட்டது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது விஷால் “ விஷால் 25 “நிகழ்ச்சியில் தேர்தெடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கினார். ‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் இதை வழங்கினார்.

 
 அதன் பின்னர் பேசிய விஷால் ‘இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம். நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்’என்றார்
 
அப்போது மேடையிலிருந்து இயக்குனர் பாண்டிராஜ் , விஷால் எதற்கு என்னை விவசாயிகளுக்கான உதவி தொகையை வழங்க சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. நான் வேகமாக படமெடுப்பவன். விஷால் எனக்கு ‘கதகளி’ திரைப்படத்தை வேகமாக முடித்து தந்து சொன்ன தேதியில் வெளியிட்டார் என்றார் பாண்டிராஜ். 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close