
என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்:… நடிகையின் சோகமான பதிவு..!!
என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்:… நடிகையின் சோகமான பதிவு..!!
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா, தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து இருந்தார் என்பதும், தற்போது அவர் விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ரம்யா வளர்த்து வந்த மிலோ என்ற செல்ல நாய், உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டது இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:..
எனக்கு எல்லாமே மிலோ தான். உலகமே மிகப்பெரிய தொற்று வைரஸ் உடன் போராடிக் கொண்டிருக்கும் போது என்னுடைய மிலோவும் நோயால் கடந்த சில நாட்களாக போராடியது. அறுவை சிகிச்சைகள் செய்தும் பயனில்லாமல் என்னுடைய மிலோ 29-3-2020 அன்று
காலை இறந்துவிட்டது. இதனால் நான் கடுமையாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளேன். இதை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை.
என்னுடைய ஒரு பகுதியே என்னை விட்டு பிரிந்து சென்றது போல் வலிக்கிறது. என் மீது அதிக அன்பை பொழிந்த மிலோ தற்போது உயிரோடு இல்லை. மேலும், கடந்த மூன்று வாரங்களாக என் மிலோ குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அவன் என்னுடைய குழந்தை, செல்லம், உலகம் எல்லாமே. எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது அவன் தான். என்னை பாதுகாத்தது அவன் தான். நான் மிலோவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். மீண்டும் உன்னை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் நடிகை ரம்யா பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய ஆசைக்குரிய மிலோவின் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.
TAGS I lost the one who defended me: ... : ... The sad record of the actress .. !!master-actress-Actress ramya-share-his-emotionaRamya dog name miloramyasub