Kinky Fetishes Sex Porn Videos scat porn
இயல்-இசை-நாடகம்இயல்-இசை-நாடகம்-செய்திகள்தமிழ் செய்திகள்

வேந்தர் டிவியில் ‘தேவதையை கண்டேன்’..!

வேந்தர் டிவியில்  

பெண்ணை பேரழகியாக்கும் நிகழ்ச்சி 

‘தேவதையை கண்டேன்’

கல்லூரி செல்லும் பெண்களாகட்டும் வேலைக்கு செல்லும் பெண்களாகட்டும் எல்லோருமே தங்களது தோற்றத்தில், உடைகளில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள் தானே. ஆனாலும் தாங்கள் அழகாக இருக்கிறோமா என்கிற சந்தேகம்  பலருக்கு  இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அழகு ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. அதை முறைப்படி வெளிப்படுத்தினால் நீங்களும் பேரழகி தான்.. இப்படிப்பட்ட ஒரு கான்செப்டை மையமாக வைத்து வேந்தர் டிவியில் தயாராகி வரும் நிகழ்ச்சி தான் ‘தேவதையை கண்டேன்’.. 

 

பக்கத்து வீட்டுப்பெண் போல தோற்றமளிக்கும் ஒரு இளம்பெண்ணை, அந்தப்பெண்ணுக்குள் ஒளிந்துகொண்டு இருக்கும் அழகை, ஒப்பனை கலையால் முறைப்படி வெளிக்கொண்டு வந்து எப்படி அழகு தேவதையாக மாற்றுகிறார்கள் என்பதை அரைமணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மிக திறமையான ஒப்பனை கலைஞர் மற்றும் ஆடை அலங்கார நிபுணர் ஆகியோர் ஒன்று சேர்ந்து  தங்களது கைவண்ணத்தால் ஒரு சாதாரண தோற்றமுள்ள பெண்ணை எப்படி பேரழகியாக மாற்றுகிறார்கள் என்பதை பார்த்தால் இமைக்க மறந்து விடுவார்கள் இளம்பெண்கள்.. 

 

தங்கள் தோற்றத்தை பற்றி குறைத்து மதிப்பிட்டு வருத்தம் கொள்ளும் இன்றைய இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்சி உருவாகி வருகிறது என்றால் அது மிகையல்ல. வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை அஞ்சலி தொகுத்து வழங்குகிறார் .

 
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close