கமல்ஹாசன் வெளியிட்ட இளையராஜா பாடல்!

கமல்ஹாசன் வெளியிட்ட இளையராஜா பாடல்!

கமல்ஹாசன் வெளியிட்ட இளையராஜா பாடல்!

இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும் வெகு அரிதாகவே மற்ற இசையமைப்பாளர்களின் படங்களில் பாடி வருகிறார். அந்த வகையில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்த ஒரு படத்தில் இடம் பெற்ற பாடலை இளையராஜா பாடியுள்ளார். இந்த பாடலை உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரவுன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’சிதம்பரம் ரயில்வே கேட்’ என்ற படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘சொக்குறேன் சொக்குறேன்’ என்ற பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார்.

இந்த பாடல் வெளியீட்டு விழா (29-1-2020) நடைபெற்ற நிலையில் இந்த பாடலை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள்  வெளியிட்டார். இந்த பாடல் வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் இப்ராஹிம், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, இயக்குனர் சிவபாலன், பாடலாசிரியர் அருண்பாரதி உள்பட படக்குழுவினர் கொண்டனர். இந்த பாடல் இளையராஜாவின் மற்ற பாடல்களைப் போல் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS