விமர்சனம்

கே 13-சினிமா விமர்சனம்..!!K 13 Movie Review in Tamil

திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும் அருள்நிதி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். கிடைத்த வாய்ப்பும் பறி போகிறது. சொன்ன கதை பிடிக்காமல், இரண்டு நாட்களில் வேறு கதை ரெடி பண்ண சொல்லி ஒருவர் கேட்கிறார்.
இந்நிலையில், நண்பர்களுடன் கிளப்புக்கு செல்கிறார் அருள்நிதி. அங்கு நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை பார்த்து பழக ஆரம்பிக்கிறார். இந்த பழக்கம் வீடு வரைக்கும் செல்கிறது.
மறுநாள் காலை வீட்டில் ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு இருக்கும் அருள்நிதி, கண் விழித்து பார்க்கும் போது, நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கை அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அருள்நிதி, அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.
இறுதியில் அருள்நிதி எப்படி தப்பித்தார்? ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை யார் கொலை செய்தார்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை…….!!!
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி முழுக்கதையை தாங்கி பிடித்திருக்கிறார். தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகி ஷ்ரத்தா அழகாக வந்து கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நண்பர்களாக வரும் ரமேஷ் திலக், யோகி பாபு ஆகியோர் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்கள். காயத்ரி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.

அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் நடக்கும் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன். அதை சைக்கோ திரில்லருடன் கொடுத்திருக்கிறார். எங்கும் தொய்வில்லாமல்
வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சியுடன் படத்தை முடித்திருப்பது அருமை.
சாம்.சி.எஸ். இசையும், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்..
மொத்தத்தில் ‘கே-13-ஓக்கேதான்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close