செய்திகள்தமிழ் செய்திகள்

களவாணி – 2 பிரச்சனை தீர்ந்தது..!!Kalavaani– 2 problem solved


” களவாணி – 2 ” படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். பின்னர் இயக்குநர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் முட்டுக்கட்டை நீடித்தது. இந்நிலையில் இன்று நேரில் சந்தித்து கொண்ட விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்னையை பேசி தீர்த்து கொண்டனர்.
சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். இதனால் களவாணி – 2 படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கி விட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close