விமர்சனம்

களவாணி மாப்பிள்ளை-சினிமா விமர்சனம்..!!

களவாணி மாப்பிள்ளை-சினிமா விமர்சனம்..!!

பிரபலமான நகைச் சுவை எழுத்தாளர்,இயக்குநர் சித்ராலயா
கோபு, இயக்குநர் சுந்தர்.சி போன்றவர்கள் வரிசையில் இப்படத்தின் இயக்குநர் காந்தி மணிவாசகம் வந்திருக்கிறார்.

‘மிகவும் செல்வந்தர் தேவயானி. இவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. இவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கணவர் ஆனந்த் ராஜ்க்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால் அப்பா இறந்து போகிறார். கார் ஓட்ட தெரியாது என்று தன்னிடம் மறைத்ததால் ஆனந்த் ராஜை ஒதுக்கி வைக்கிறார்.
தேவயானியின் ஒரே மகள் நாயகி அதிதி மேனன். இவர் கால்நடை உதவி மருத்துவராக இருக்கிறார். இவருக்கும் நாயகன் தினேஷுக்கும் ஒரு விபத்தில் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. தினேஷுக்கு 18 வருடங்களுக்கு எந்த வண்டியும் ஓட்டக்கூடாது என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, எந்த வண்டியும் ஓட்ட பழகாமல் வளர்ந்திருக்கிறார்.

தினேஷ், அதிதிமேனனின் காதல் விஷயம் தேவயானிக்கு தெரிந்து திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். கார் ஓட்ட தெரியாத காரணத்தால் கணவரை ஒதுக்கி வைத்திருக்கும் தேவயானிக்கு, தினேஷின் விஷயம் தெரிந்ததா? நாயகி அதிதி மேனனை தினேஷ் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் முழுவதும் கதையோடு ஒன்றிய காமெடி என்பதால் படத்தில் நடித்த அனைவரும் அதனை
உணர்ந்து நடித்திருப்பது சிறப்பு.
தினேஷ் இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். காமெடியில் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதிதி மேனன்.. தினேஷை காதலிப்பது..ஆடுவது..பாடுவது..என்று நடிப்பில் ஜமாய்த்து விட்டார்.
மாமியாராக நடித்திருக்கும் தேவயானி, மிடுக்கான பணக்கார தோரணையில் அழகாய் பொருந்தி விட்டார்.தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு கணவராக நடித்திருக்கும் ஆனந்த் ராஜுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.மனைவிக்கு அடங்கிய கணவராக வளைந்து நெளிந்து ((வில்லன் தோரணையை காட்டாமல்)) அழகாய் காமெடி செய்து நடித்திருப்பது வித்தியாசமாகத்தான் இருந்தது,.ஆனந்தராஜிற்கு அல்லக்கையாக வரும் அல்லக்கை…. சாம்ஸின் சேஷ்டை கலந்த காமெடி நடிப்பும்..வசன உச்சரிப்புகளும் யதார்த்தமாய் ரசிக்கும்படியாக இருந்தது.

பாசமுள்ள தினேஷின் தாயாக வரும் ரேணுகாவும் தனது கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார்.முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் இருவரும் பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரம்யமாக இருந்தது.

 

மொத்தத்தில்‘களவாணி மாப்பிள்ளை’ …..கலகலப்பான மாப்பிள்ளை…!!

 

 

 

 

 

Tags
Show More

2 Comments

  1. You have made some really good points there.
    I checked on the web to learn more about the issue and found most individuals will go along with your views
    on this site.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close