நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் விவகாரம்..!!

நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் விவகாரம்..!!

 ‘நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் விவகாரம்…!!

கவிதாலயாவின் ‘நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை..!!கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில்
திரைப்படத்தயாரிப்புத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம். தமிழ் திரையுலகஜாம்பவான் கே பாலச்சந்தர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக்காப்புரிமை குறித்து மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆகையால்,ஒருபோதும் இந்நிறுவனம் விதிமீறல்களுக்கு எந்த விதத்திலும் இடம் அளித்ததில்லை.

மேலும், கவிதாலயா…எழுத்தாளர்களின் பங்கையும், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பதால், அவர்களை மிகுந்த
மரியாதையுடனேயே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது.இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய
தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம்.அது குறித்து தெளிவுபடுத்தவே இந்த அறிக்கைவெளியிடப்படுகிறது. ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில்,
கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களை
அணுகவும் இல்லை. நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் திரு. விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒருகுற்றச்சாட்டு. அவ்வாறு, ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை
மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். செயல்பட்டும் வந்திருக்கிறது.
மேலும், திரு. விசு அவர்கள் கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’
திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும்,முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்தமீறல்களுக்கும் விதிமீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை இதன் மூலம் வலியுறுத்திக் கூறுவதோடு அனைத்து தரப்பினருக்கும் இதன்மூலம் தெளிவுபடுத்துகிறோம்……..நன்றி….!!

========        ++++++++        =========      ++++++++

Netrikkan And Thillu Mullu Tamil re-make Matter..!!

In its 4 decades of active industry presence, Kavithalayaa Productions (P) Ltd, is credited for production and trading of various films in various languages. Founded by the doyen of the Tamil Film industry, Kavithalayaa recognizes and respects the works and rights of various individuals and is very careful and cautious when acquiring or dealing with such rights.

As the producer of the film ‘Netrikkan’, Kavithalayaa is the absolute owner of all the copyrights related to the said film. Mr. Visu has been reporting in several sections of media that he has not been compensated as a writer in the licensing of the Tamil remake rights of ‘Netrikkan’, besides falsely accusing Kavithalayaa and its officers of various infringements. Mr. Visu’s statements are without merits and have been made without any verification of real facts. As the copyright holders of the film Netrikan, Kavithalayaa has not assigned the Tamil remake rights of the said film in favor of any third party, and will adhere to its agreements by compensating the required parties if any assignment happens in the
future. The right to use only the title, Netrikkan has been given to a third party and this right exclusively belongs to Kavithalayaa. The insinuations and accusations levied on Kavithalayaa and its officers in connection with other films are also completely baseless and denied. Kavithalayaa or its officers are not even parties to the action said to have been initiated by Mr. Visu in respect of the film Thillu Mullu. Kavithalayaa asserts that they have at all times adhered to the Agreements with writers/ authors and there has been no violation whatsoever in the eyes of the law.

 

 

 

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS