இயல்-இசை-நாடகம்இயல்-இசை-நாடகம்-எம்.ஜி.ஆர்செய்திகள்தமிழ் செய்திகள்நாடகம்

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்..!!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாடகம்..!! 

 நாடக உலகிலிருந்து திரையுலகில் கால் பதித்து சாதனைகள் பல
புரிந்த”மக்கள் திலகம்”எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டையொட்டி நாடக உலகின் சார்பில் “பாரதி கலைஞர் எஸ்.வி. சகஸ்ரநாமம் சென்டினரி அகாடமி”யின் சார்பாக மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் கலையரங்கில் , கேட்டதும் கொடுப்பவனே” என்ற நாடகத்தை “கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்” ஆதரவில் கடந்த 4 -9 -2018 – அன்று நடத்தி நூற்றாண்டு நாயகர் எம். ஜி.ஆர். அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்கள்.

இந்த நாடகத்தின் கதைவசனம் 16 வயதினிலே திரைப்படப்
புகழ் வசனகர்த்தா மறைந்த கலைமணி அவர்களால் எழுதப்பட்டது. அதற்கு இப்போது புதிய பரிணாமம் கொடுத்து நாடாகமாக்கம், இயக்கம், தயாரிப்பு என எல்லாவற்றையும் ‘கலைமாமணி’ பி.ஆர். துரை ஏற்று நடத்தியதை பார்க்கும்போது பிரம்மிப்பாகத்தான் இருந்தது.

நாடகத்தில் கதாநாயகன் செய்த தர்மமே கடைசியில் அவனை காப்பாற்றுகிறது என்பதுதான் கதையின் சாராம்சம்.மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்ய தகுதியான நாடகம் தான்.

சின்னத்திரை..வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறக்கும் பூவிலங்கு மோகன் அவர்கள்தான் ‘கேட்டதும் கொடுப்பவனே’-நாடகத்தின் கதையின் நாயகன்..இவருடன் ‘கலைமாமணி’, ஏ. பி.என். தசரதன், வந்தனா பாப்பாத்தி, உஷாநந்தினி, எம்.ஏ. பிரகாஷ், என்.எஸ். சுரேஷ், வெங்கட்ராமன், பக்திசரன், ரமணி, ரஞ்சித், பிரபாகர், ஸ்ரீ ராகவ், எழில் நம்பி, Tutor கணேசன் ஆகியோருடன் ‘கலைமாமணி ‘பி.ஆர். துரை ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்நாடகத்தில் பூவிலங்கு மோகன் தன் மனசாட்சியுடன் பேசும் காட்சியும், வந்தனா பாப்பாத்தி மனைவி மீனாட்சியாக வந்து மாங்கல்ய பிச்சை கேட்கும் காட்சியும் மெய் சிலிர்க்க வைத்தது. ஒரு பெரியவர் வேடத்தில் வந்த “கலைமாமணி” ஏ. பி. என். தசரதன் பலகாட்சிகளில் வந்து பேசாமலே இருந்தாலும் கடைசி காட்சியில் அவர் கண்கலங்கப்
பேசியது அபாரம்.. நகைச்சுவை காட்சிகளும் அனைத்து தரப்பினரும் ரசித்து, சிரிக்கும்படி இருந்தது. எல்லாவற்றிற்கும் சிகரமாக நிறைவு காட்சியில் பூவிலங்கு மோகனின் நடிப்பும் அவரது நண்பர் பாலகிருஷ்ணனாக நடித்த சேவா ஸ்டேஜ் துரையின் உணர்ச்சிகரமான நடிப்பும் கண்களை குலமாக்கியது. இந்த நாடகத்தின் அரங்கேற்றம் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக அமைந்தது அனைவரையும் வியக்கவைத்தது. ரசிகர்கள் வியப்போடும், பெரும் மகிழ்ச்சியோடும் நாடகத்தை கடைசிவரை இருந்து பார்த்துக்கொண்டு இருந்ததை பார்த்தபோது நாடகக்கலை நலியவில்லை அது புத்துணர்வு பெற்று திகழ்கிறது என்பது மனதிற்கு மகிழ்ச்சியை ஊட்டியது.
அற்புதமான இந்த நாடகத்திற்கு தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலங்களிலும்…வெளிநாடுகளிலும்…நாடகங்களுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் தமிழர்கள் ,தமிழ் நாடக சபாக்கள் கண்டிப்பாக
ஆதரவு தந்து வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.

 

 

 

 

 

Tags
Show More

Related Articles

Close