செய்திகள்தமிழ் செய்திகள்நிகழ்வு வீடியோமுன்னோட்டங்கள்
கிளம்பிட்டாளே விஜயலெட்சுமி….!!!

கிளம்பிட்டாளே விஜயலெட்சுமி…!!!
‘ஜோதிகாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் மொழி. வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடிப்பில் புதிய பரிணாமத்தை வழங்கி இருப்பார். இந்த படத்தை இயக்கியவர் ராதாமோகன்.தற்போது அதே கூட்டணி மீண்டும் “காற்றின் மொழி” படத்தின் வாயிலாக இணைந்திருக்கிறது. இந்தி முன்னணி நடிகையான வித்யா பாலன் நடித்த ‘தும்ஹாரி சூளு’வின் தமிழ் ரீமேக்கான இதில் வித்யா பாலன் நடித்திருந்த ரேடியோ தொகுப்பாளர் வேடத்தில் நடிக்கிறார் ஜோதிகா.
பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் தயாரிப்பில் ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.
இதன் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளியாகிக் கவனம் பெற்றுவரும் நிலையில், தற்போது இதிலிருந்து ஒரு பாடலின், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. ஜோதிகா கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடலை நகுல் அபயங்கார் பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதியுள்ளார். “கிளம்பிட்டாளே விஜயலெட்சுமி….” எனத் தொடங்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.