விமர்சனம்

கூத்தன்-சினிமா விமர்சனம்..!!

கூத்தன்-சினிமா விமர்சனம்..!!

இயக்குனர் வெங்கி நவீன நடனத்தையும்-பரதத்தையும் மையப்படுத்தி கதையை உருவாக்கி படத்தை இயக்கியிருக்கிறார்.சென்னையில் ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டிங்கை அகற்றாமல், சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அப்பகுதியில் துணை நடிகர்கள்..க்ரூப் டான்சர் களின் குடும்பங்கள் என்று முப்பத்திஐந்து குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.அங்கு
வசித்து வரும் துணை நடிகையான ஊர்வசியின் மகன்தான் நாயகன் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நடன குழுவை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கலைஞர்களுக்காக கொடுத்த இடத்தை கேட்கிறார் தயாரிப்பாளரின் மகன். தான் பண நெருக்கடியில் இருப்பதாகவும், அந்த இடத்தை கொடுத்தால் பணப்பிரச்சனை தீரும் என்றும் கூறுகிறார். ஆனால் சினிமா கலைஞர்களுக்கோ அந்த இடத்தை விட்டு போக விருப்பம் இல்லை. அதேசமயம், தங்களுக்கு இடம் கொடுத்த தயாரிப்பாளர் மகனையும் அப்படியே அனுப்ப மனம் இல்லை. அதனால், தங்களால் முடிந்த பணத்தை விரைவில் கொடுத்து இடத்தை எங்கள் பெயருக்கே மாற்றிக்கொள்கிறோம்.. என்று நாயகன் ராஜ்குமார் கூறுகிறார்.
அதன்படி பணத்தை திரட்ட தயாராகும் ராஜ்குமார், உலகளவில் நடக்கும் நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றால் கோடிக் கணக்கில் பணம் கிடைப்பதை அறிந்து அதில் கலந்துக் கொள்ள முயற்சி செய்கிறார்.மற்றொரு புறத்தில் பரத நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர் நாயகி ஸ்ரீஜிதா கோஷ், . இவரின் ஒரே குறிக்கோள் பெரிய நடன கலைஞராக இருக்கும் நாகேந்திர பிரசாத்தை தோற்கடித்து
அவர் முகத்தில் கறியை பூசவேண்டும் என்பதுதான்.. நாயகன் ராஜ்குமாருக்கும் நாயகி ஸ்ரீஜிதா கோஷ்க்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஸ்ரீஜிதா கோஷ் அடமானத்தில் இருக்கும் தனது வீட்டை மீட்கப் பணப்பிரச்சனையில் சிக்குகிறார். இதற்கு ஒரே வழி நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று இருவரும் முடிவெடுத்து களத்தில் குதிக்கிறார்கள்.இறுதியில் நாயகன் ராஜ்குமார்-நாயகி ஸ்ரீஜிதா கோஷ் இருவரும் அந்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்று நாயகன் தனது கலைஞர்களுக்கான குடியிருப்பு பகுதியை தக்க வைத்தாரா? நாயகி ஸ்ரீஜிதா கோஷ் தனது வீட்டை மீட்டாரா? நாகேந்திர பிரசாத் மீது ஸ்ரீஜிதா கோஷ்,
கோபமாக இருக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடனத்தை மையமாக வைத்து பிரபு தேவா நடித்து சமீபத்தில் வெளிவந்த லக்ஷ்மி படம் உட்பட பல படங்கள் வெளியாகி இருந்தாலும், மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராஜ்குமார், சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி கடைசி வரையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.நடன சகோதரிகளான , கிரா நாராயணன்-ஸ்ரீஜிதா கோஷ், ..(அக்காவும்-தங்கையும்) நாகேந்திரப் பிரசாத்தால் பாதிக்கப்பட்டு கடனாகி தவிக்கும் காட்சிகளும்…துணைநடிகையாக படப்பிடிப்பு தளங்களில் ஊர்வசி பண்ணும் அதலங்களும்..வசன உச்சரிப்புகளும்..நடிப்பும் தியேட்டரை சிரிப்பால்
அதிர வைக்கின்றன.பாக்யராஜும் முருங்கைக்காய் மேட்டரைப் பேசி
தான் வரும் ஒரே காட்சியில் ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

நாயகியின் அக்காவாக நடிக்கும் நடிகை கிரா நாராயணனின் நடையுடை
-பாவனை-நடனம் அனைத்தும் அற்புதம்.நாயகி ஸ்ரீஜிதா கோஷின்
துடுக்கான நடிப்பும்…காதல் காட்சிகளில்
அளவான நடிப்பும் மிகையில்லாமல் இருந்தது.

வில்லத்தனமான நடிப்பும் நடனமும் நாகேந்திரப் பிரசாத்துக்கு யதார்த்தமாக இருந்தது.நாயகனை ஒருதலையாகக்
காதலிக்கும் சோனால்சிங் டூயட் காட்சியிலும்…கடைசியில் நாயகனுடன் போட்டியில் இணைந்து ஆடும் காட்சியிலும் பாராட்டும்படி நடித்திருந்தார்.

ஜூனியர் பாலையா,கவிதாலயம் கிருஷ்ணன்,விஜய் டிவி புகழ் சரத்,முல்லை,கோதண்டம், கெளதம்,ஆனந்த்,சுரேஷ்,தீனா,
ஆதம்ஸ்.ஸ்டண்ட் அழகு,சிறப்புத்தோற்றத்தில் நடித்த..கலா மாஸ்டர்,
ராம்கி,சஞ்சய் அஸ்ரானி,ப்ரிய தர்ஷினி,
ரம்யா,பொன் கோகிலம்,பரத் கல்யாண்,மனோபாலா
ரேணுகா,ஸ்ரீ ரஞ்சனி,சினிதா போன்ற நட்சத்திரப் பட்டாளங்களின் ஆக்கிரமிப்புகள் படத்தை கலகலப்பாக்கியது.காலனி மற்றும் நடன அரங்க செட்டுகளை அழகுற வடிவமைத்த ஆர்ட் டைரக்ட்டர் ஆனந்திற்கு ஸ்பெஷல் ஷொட்டு .

டி.ராஜேந்தர் பாடிய “மங்கிஸ்த்தா
..கிங்கிஸ்த்தா..”என்ற பாட்டும்,ரம்யா நம்பீசன் பாடிய “காதல்..காட்டுமிராண்டி..”பாட்டும் இளைஞர்களை கவர்ந்த பாடல்களாகிவிட்டது.அழகுற இசையமைத்த பால்ஸ்.ஜி.க்கு
வாழ்த்துக்கள்.ரசிக்கும் படியான வசனங்களை எழுதிய சித்ரா வெங்கி,
சுகி மூர்த்தி இருவருக்கும்,தெளிவான ஒளிப்பதிவால் ரசிகர்களைக்
கவர்ந்த ஒளிப்பதிவாளர் மாடசாமிக்கும்
இயக்குநர் A .L .வெங்கி முழு சுதந்திரம் கொடுத்து
வேலை வாங்கியிருப்பதை படத்தைப் பார்க்கும் போது
ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிந்தது.

மொத்தத்தில் திரையுலகை
நேசிக்கும் ஒவ்வொருவரும் கூத்தனை கொண்டாடி
(பார்த்து) மகிழலாம்.

 

 

 

Tags
Show More

Related Articles

Close