விமர்சனம்

குத்தூசி-சினிமா விமர்சனம்..!!!

குத்தூசி-சினிமா விமர்சனம்..!!

வெளிநாடு செல்ல துடிக்கும் இளைஞன் ஒருவன், தனது ஊர் பிரச்சனைக்காக தனது ஆசையை விட்டுவிட்டு விவசாயத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவதை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவசக்தி.
எத்தனையோ விவசாயம் சம்பந்தப்பட்ட படங்களை பார்த்திருப்போம்
ஆனால் இந்தப்படம் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், படித்த, படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும். இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்த்தும்படியாக இயக்கியிருக்கிறார்.
சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக திலீபன் கதைக்கு சரியாக பொருந்தியிருக்கிறார்.நாயகி அமலாரோஸ் காதல் காட்சிகளில் மட்டுமல்லாது அவரது நடிப்பு பல இடங்களில்
ரசிக்கும் படியாக இருந்தது.நமது பாரம்பரிய 176 விதமான
நெல்வகைகளில் பலவற்றைக் கண்டுபிடித்து சேகரித்து இயற்கையான வகையில் நெற்களை உருவாக்கும் திட்டத்தில் கதாநாயகன் முற்படும் போது வில்லன்கள் புகுந்து வெளிநாட்டு நபரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் இறுதிவரையில் நாயகன் அதை முறியடிக்கிறாரா? காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாரா?என்பது மீதிக்கதை.

திலீபனின் அப்பா-அம்மாவாக நடித்தவர்கள் கதா பாத்திரத்தோடு ஒன்றிப்போய் நடித்திருந்தார்கள்.

கதையை நன்றாகஇயக்குனநர் நகர்த்தி செல்வதற்கு பாகியின்
ஒளிப்பதிவும்-கண்ணனின் இசையும் நன்கு கைகொடுத்திருக்கிறது,..படத்தில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகளில்
வயல் வரப்பில் அயல் நாட்டுக்காரருடன் திலீபன் போடும் சண்டைக்காட்சி அடேயப்பா…என்று புருவங்களை உயர்த்தி ஆச்சர்யப்பட வைத்து விட்டது.சண்டைப்பயிற்சி மாஸ்டர் ராஜசேகருக்கு ஸ்பெஷல் ஷொட்டு.பல காட்சிகளில் வசனங்கள்
சாட்டியடியாய் இருந்தது.வசனமெழுதிய வீருசரணுக்கும் ஸ்பெஷல் ஷொட்டு.கோவில்கோபுர கலசங்களில் நம் முன்னோர்கள் நெல் விதைகளை ஏன் வைக்கிறார்கள் என்பதற்கு இயக்குநர் தந்த விளக்கம் அற்புதம்.ஜெயபாலனின் நடிப்பும் விவசாயத்தை மையப்படுத்தி அவர் பேசும் வசனங்களும் படத்திற்கு பெரிய பிளஸ் பாய்ண்ட்.யோகிபாபுவை
இயக்குநர் கதையோட்டத்துடன் யதார்த்தமாக நடிக்கவைத்தருப்பது
ரசிக்கும் படியாக இருந்தது.இது போன்ற நல்ல படங்களை ரசிகர்கள் விரும்பி தியேட்டருக்கச் சென்று பாருங்கள்.

Tags
Show More

Related Articles

Close