விமர்சனம்
மாணிக்-சினிமா விமர்சனம்..!!

மாணிக்-சினிமா விமர்சனம்..!!
கடந்த 2018 -ஆம் ஆண்டு இறுதியில் “பிரான்மலை”,”காட்சிப்பிழை”-என்ற இரண்டு படங்கள் வெளிவந்து ரசிகர்களை மிகவும் சோதனைக்குள்ளாக்கி தலைதெரிக்க தியேட்டரைவிட்டு அவர்களை ஓடவைத்தது.
வருடக்கடைசியில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு
சோதனை என்றால்….2019 -ஆம் புது
வருட ஆரம்பத்தில் வெளியான முதல் படமான..”மாணிக்” என்ற படம் முந்தைய இரண்டு படங்களை
தூக்கி சாப்பிட்டு விட்டது.தாங்க முடியலடா சாமி…எப்படித்தான் இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் ஓக்கே….செய்து எடுத்தாரோ தெரியவில்லை…அறிவு ஜிவி என்று தன்னை சொல்லிக் கொள்ளும்..டி.வி. புகழ் மா.கா.பா. ஆனந்த் இந்தக்கதையை எப்படித்தான் தேர்வு செய்து நடித்தாரோ தெரியவில்லை…மொத்தத்தில் படம் பார்த்த ரசிகர்களின் காதுகளிலிருந்தும்…மூக்கிலிருந்து ரத்தம்
கொட்டியது என்னவோ உண்மைதான்.
இயக்குநர்… மார்டின்…சார்…தயாரிப்பாளர் படத்தின் விளம்பரத்திற்காக
போஸ்டர் அச்சடித்து செலவு செய்த காசாவது அவருக்கு திரும்பக் கிடைக்குமா? படம் எடுக்க வேண்டும் என்று ஆர்வமாக வரும் தயாரிப்பாளர்களை ஏன்யா…இப்படி சாகடிக்கிறீங்க…..