மாஃபியா – பாகம் 1 =சினிமா விமர்சனம்..!!

மாஃபியா – பாகம் 1 =சினிமா விமர்சனம்..!!

மாஃபியா – பாகம் 1 =சினிமா விமர்சனம்..!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. குற்றப் பின்னணியில் திரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ‘மாஃபியா – பாகம் 1’ போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார். இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப்படத்தின் மையக்கதை. அதாவதுஅருண் விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக இருக்கிறார். அவரது குழுவில் பிரியா பவானி சங்கரும், ஒரு இளைஞரும் பணியாற்றுகின்றனர். சென்னையில் முக்கிய இடங்களில் அருண்விஜய் தலைமையிலான குழு திடீர் சோதனை நடத்துகிறது. இந்த சோதனையில் கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் போதை புழக்கத்தை கண்டறிகிறார் அருண் விஜய். அவரது இந்த சோதனையில் போதை மருந்து கடத்தும் சின்ன சின்ன ஆட்கள் மட்டுமே சிக்குகின்றனர். அவரால் பெரும் புள்ளிகளை நெருங்க முடியவில்லை.இந்த சூழலில், போதை மருந்து தடுப்பு பிரிவில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரும், அருண் விஜய்க்கு சில முக்கிய தகவல்களை தந்த சமூக ஆர்வலர் ஒருவரும் கொல்லப்படுகின்றனர். இதன்பிறகு தேடலை துரிதப்படுத்தும் அருண் விஜய் போதை மருந்து கடத்தல் மாஃபியாவின் பெரும் புள்ளியை கண்டுபிடித்தாரா? போதை மருந்து புழக்கத்தை ஒழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நான்கு நாட்களில் நடக்கும் கதையை….மிகவும் விறு விறுப்பாக ஆரம்பித்து கடைசி வரையில் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறார்கள் படத்தின் இயக்குநரும், நாயகன் அருண் விஜய்யும்.

நாயகன் அருண் விஜய், போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். வில்லனை நெருங்க முயற்சிக்கும் காட்சிகளிளிலும்…ஆக்‌ஷன்காட்சிகளிலும்…. அதகளப்படுத்தி இருக்கிறார்.நாயகி பிரியா பவானி சங்கர், மற்ற நாயகிகள் போல் காதல், ரொமான்ஸ் என்று இல்லாமல்(அப்பாடா)ஆக்‌ஷன் காட்சிகளிலும் திறம்பட நடித்து கொடுத்த வேலையை சிறப்பாகவேசெய்திருக்கிறார்.

பிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியான ஸ்டைலிஷ் வில்லனாக வந்து ஏராளமான எதிர் பார்ப்பாய் உண்டாக்கியது என்னவோ உண்மைதான்…ஆனால் இந்த விஷயத்தில் ரசிகர்களை இயக்குநர் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
காவல் துறையில் உள்ள சிலர் வில்லன்களுக்கு உதவுவது போன்ற காட்சிகள் இந்தப்படத்திலும் உண்டு என்றாலும் கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள்.

தலைவாசல் விஜய் சமூக ஆர்வலராக சிறிது நேரம் வந்தாலும் மனதில் பதிந்து விடுகிறார்.
அவரைப்போல் காவல் துறையில் நேர்மையான உயர் அதிகாரியாக((பரவலாக பல படங்களில் தற்போது வருகிறார். அவர் பெயர் தெரியவில்லை )) நடித்தவரின் நடிப்பும் அற்புதம். பிரசன்னாவின் தம்பியாக நடித்தவரின் மிடுக்காண நடிப்பும் கச்சிதம்.

படத்தின் விறுவிறுப்பிற்கு காரணமான கலைஇயக்குனர், படத்தைஅழகாய் வெட்டி ஒட்டிய எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்க்கும்,ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய்க்கும் ஸ்பெஷல் ஷொட்டு.
இயக்குநர் கார்த்திக் நரேன் க்ளைமாக்ஸில்…வைத்த டிவிஸ்ட்..படத்தின் அடுத்த பாகத்திற்கான தொடக்கம் என்பதையும் அதில் அருண் விஜய்யின் ஒப்பனையும்..அவரது கதா பாத்திரத்தின் தன்மையையும் உணர்த்தி படத்தின் பாகம் இரண்டை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிவிட்டார்.
மொத்தத்தில் ‘மாஃபியா’…செம மாஸ்யா.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS