மாமாங்கம்= சினிமா விமர்சனம்..!!

மாமாங்கம்= சினிமா விமர்சனம்..!!

மாமாங்கம்= சினிமா விமர்சனம்..!!

வல்லவநாட்டை சேர்ந்த சாவேரி இனத்தின் உரிமையையும், ஆட்சியையும் சாமுத்ரி இனத்தை சேர்ந்தவர்கள் பறிக்கிறார்கள். தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமையையும் ஆட்சியையும் மீட்டெடுக்க சாவேரி இனத்து ஆண் பிள்ளைகளை தற்கொலைப் படையாக வளர்க்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாமாங்கம் திருவிழாவில் இந்த பகையை தீர்க்க செல்கிறார் மம்முட்டி. சாமுத்ரி தலைமையை அழிக்கப் போராடி தோல்வியடைகிறார். இதனால் சொந்த ஊர் மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் மம்முட்டி, நாடு திரும்பாமல் தலைமறைவாகிறார்.
அடுத்த முறை நடக்கும் மாமாங்கத்தில் உன்னி முகுந்தன் மற்றும் மாஸ்டர் அச்சுதன் செல்கிறார். அதில் இவர்கள் வெற்றி கண்டார்களா? இல்லையா? மம்முட்டி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் மம்முட்டிக்கு காட்சிகள் குறைவாகவே உள்ளது. ஆனால் நிறைவாக செய்திருக்கிறார்.
உன்னி முகுந்தன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாஸ்டர் அச்சுதன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இனியா நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாராவின் நடிப்பு சிறப்பு.மாமாங்கம் என்பது மன்னர்களின் ஆட்சி காலத்தில் கேரளாவின் மலபார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் பல ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஒரு திருவிழா. இந்த விழாவை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பத்மகுமார். வரலாற்று படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது.

மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. ஜெயசந்திரனின் இசையில் பின்னணியை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘மாமாங்கம்’ பிரம்மாண்ட மிரட்டல்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS