மீண்டும் ஒரு மரியாதை– சினிமா விமர்சனம்..!!

மீண்டும் ஒரு மரியாதை– சினிமா விமர்சனம்..!!

மீண்டும் ஒரு மரியாதை-சினிமா விமர்சனம்..!!

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர்
இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கியிருக்கும் படம்
‘மீண்டும் ஒரு மரியாதை’.

அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா  மற்றும் ஜோ மல்லூரி நடித்திருக்கிறார்கள்
. சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார்.

கலை இயக்கத்திற்கு மோகனமகேந்திரன் பொறுப்பேற்க, நடனத்திற்கு கூல் ஜெயந்த், பிரசன்னா, ஷண்முகசுந்தர் ஆகியோர் பங்களிக்க, கம்பம் சங்கர் வடிவமைப்பு பணிகளை செய்திருக்கிறார்.

சபேஷ் – முரளி பின்னணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்கி, நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோர் பாடல்களை எழுத, என் ஆர் ரகுநந்தன் பாடல்களை படைத்திருக்கிறார்.

எழுத்தாளரான பாரதிராஜா லண்டனில் வசிக்கும் மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார். அங்கு அவருடன் பழகி இறந்த நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை தொடங்குகிறார். அப்போது அக்கா கணவரின் கொடுமையில் இருந்து தப்பித்த நட்சத்திராவை சந்திக்கிறார். தற்கொலை முடிவில் இருக்கும் நட்சத்திரா மனதை மாற்றிக்காட்டுவதாக உறுதி தருகிறார்.

10 நாட்களில் மாற்ற முடியாவிட்டாலே தன் கையாலேயே கொன்றுவிடுவதாக சவால் விடுகிறார். அந்த 10 நாட்கள் பயணத்தில் நட்சத்திராவுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை புரியவைத்தாரா? பாரதிராஜா எடுத்துக்கொண்ட கடமை என்ன ஆனது? பாரதிராஜா, நட்சத்திரா இருவருக்கும் இடையே உண்டாகும் உறவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

பாரதிராஜா தன் வயதிற்கேற்ற கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் அனுபவ நடிப்பை காட்டி அசத்தியிருக்கிறார். அவர் பேசும் சில வசனங்கள் சிந்தித்து செயல் படும் அளவிற்கு
அழுத்தமானதாக அமைந்திருந்தது.ராசி நட்சத்திரா தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். பாரதிராஜாவிடம் அவர் குறும்பு செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. மவுனிகா, ஜோ.மல்லூரி இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.தற்கொலையோ, கொலையோ ஒரு உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை என்பதை படம் உணர்த்துகிறது.லண்டன் அழகை சாலை சகாதேவனின் கேமரா அப்படியே கொண்டு வந்துள்ளது. ரகுநந்தனின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

மொத்தத்தில் ‘மீண்டும் ஒரு மரியாதை’ -பாரதி ராஜாவிற்காகப் பார்க்கலாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS