எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-1

எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-1

எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-1

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் எம்.என்.நம்பியார். மார்ச் 7, 1919-ல் பிறந்த இவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார். இது நம்பியாருக்கு நூற்றாண்டு. அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் விதமாக சென்னை மியூஸிக் அகாடமியில்
கடந்த 19-11-2019 அன்று அவரது குடும்பத்தினர் சார்பாக நம்பியாரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் முன்னாள் ஆலோசகரும்,,முன்னாள் டி.ஜி.பி.யுமான கே.விஜயகுமார்,இசையமைப்பாளர் இளையராஜாவும்
கலந்து கொண்டார்கள

இவ்விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், நம்பியாருக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போட்டு நடித்த சண்டைப் பயிற்சி மாஸ்டர் கே.பி.ராமகிருஷ்ணன்,இயக்குனர்கள் எஸ்பி.முத்துராமன், பி.வாசு,. நடிகர்கள் சிவகுமார், ராஜேஷ், ஸ்ரீகாந்த்,டெல்லி கணேஷ்,ஏ.எல்.ராகவன்,மோகன்ராமன்,
நடிகைகள் எம்.என்.ராஜம்,காஞ்சனா, .வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு,
டாக்ட்டர்.திருமதி.கமலா செல்வராஜ்,எம்.ஜி.சக்கரபாணி குடும்பத்தினர்கள்,மற்றும் பல நாடகக் கலைஞர்கள்,நம்பியார் ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

பிரபல பாடகர் வீரமணி ராஜு அவர்களின் ஐயப்ப ஸ்வாமியின் பத்திப் பாடல்களுடன் விழா ஆரம்பமானது.
அதன் பிறகு எம்.என்.நம்பியார் அவர்களைப்பற்றிய குறும்படம் ஒன்றினை திரையில் ஒளிபரப்பினார்கள்.நாம் இது வரையில் பார்க்காத பல அறிய நம்பியாரின் இளமைக்கால புகைப்படங்களைப் பார்க்க முடிந்தது.இந்த குறும்படத்தில் சரோஜாதேவி,நம்பியாரின் மூத்த மகன் மறைந்த சுகுமாரன்,இயக்குநர் பிவாசு,பாக்யராஜ்,மோகன்ராமன்,நம்பியாரின் மேக்கப் மேன்,கன்னட நடிகர் ராஜ்குமாரின் புதல்வர்கள்,நம்பியாரின் இளைய மகன் மோகன் நம்பியார்,பேத்தி,பேரன்கள்,மகள் மற்றும் நம்பியாரின் நண்பர்கள் போன்றோர்கள் அவரைப்பற்றிய அபூர்வமான தகவல்களைக் கூறியகாட்சிகள் இடம்பெற்றிருந்தது..ஒளிபரப்பான இந்த குறும்பட டி.வி.டி.யை இளையராஜா வெளியிட ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் முன்னாள் ஆலோசகரும்,,முன்னாள் டி.ஜி.பி.யுமான கே.விஜயகுமார் பெற்றுக்கொண்டார்.அப்போது நம்பியரின் மகன் மோகன் நம்பியார்,பேரன்கள் சித்தார்த் நம்பியார்,பரத் நம்பியார் ஆகியோரும் இளையராஜாவிடமிருந்து டி.வி.டி.யை பெற்றுக்கொண்டார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS