எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-3

எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-3

எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-3.

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் எம்.என்.நம்பியார். மார்ச் 7, 1919-ல் பிறந்த இவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார். இது நம்பியாருக்கு நூற்றாண்டு. அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் விதமாக சென்னை மியூஸிக் அகாடமியில்
கடந்த 19-11-2019 அன்று அவரது குடும்பத்தினர் சார்பாக நம்பியாரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் முன்னாள் ஆலோசகரும்,,முன்னாள் டி.ஜி.பி.யுமான கே.விஜயகுமார் பேசியதிலிருந்து……”
1976-ஆம் ஆண்டு சபரி மலைக்கு நம்பியார் சாமியோடு முதன் முதலில் போனேன்.அதற்குப் பிறகு சில வருடங்கள் அவரோடு சென்று வந்தேன்
ரொம்பவும் ஜாலியாகவும் ,டிஸிப்ளினாகவும் இருந்தது.போலீஸ் டிப்பார்ட் மெண்டில் முகத்தில் ஷேவிங் மேட்டர் ரொம்ப முக்கியமானது.முகம் பளிச்சுன்னு இருக்கணும் மேல் அதிகாரி முகத்தில் கை வைத்து தடவிப்பார்ப்பார்.லேசாக சொரசொரப்பு இருந்தால் பனிஷ்மெண்ட்தான்.இந்த விஷயத்தை புரிந்து கொண்ட நம்பியார் சாமி ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்…”நீங்க காவல் துறை அதிகாரி..நான் நடிகன்…நம்ம தொழிலுக்காக நம்மளுக்கு விதி விலக்கு இருக்கு நாம தாடி, மீசை 48-நாட்கள் வெச்சுக்க வேண்டியதில்லை என்றார்.நிம்மதியானேன்.அவர் கண்களில் தீர்க்கமான சக்தி இருப்பதை உணர்ந்தேன்.கட்டுக் கோப்பான உடல் வாகு.அவர் வீட்டில் பின்புறம் ஜிம் இருந்தது அங்கே கர்லாக்கட்டைகள் இருந்தது.அதையெல்லாம் பயன் படுத்தும் விதங்களைக் கூறினார்.மக்கள் திலகமும், இவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது நம்பியார் சாமிக்கு ஏதேனும் ஒரு மந்திரி பதவி
கொடுக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.அழைப்பும் கொடுத்திருக்கிறார்.ஆனால் இவர் போகவேயில்லை.இவர் வருவார்…வருவார்..என்று பார்த்து பொறுக்க முடியாமல் நம்பியார் வீட்டிற்கே எம்ஜிஆர் வந்து விட்டார்.உங்களுக்கு எந்தத் துறை மந்திரிப்பதவி வேண்டும் என்று எம்ஜிஆர் அவர்கள் கேட்டதும் இவர் சர்வ சாதாரணமாக “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்று மறுத்திருக்கிறார்.எம்ஜிஆர் வியந்து போனாராம். எனக்கு பிறந்தநாள் என்றல் இவரும் இவருடைய மனைவியும் ஞாபகப் படுத்தி வாழ்த்து க்களைக் கூறுவார்கள்.எனக்கு என் பிறந்தநாள் டக்குன்னு தெரியாது
இவர்கள் ஞாபகப்படுத்துவார்கள்.நம்பியார் சாமியின் இந்த நூற்றாண்டு விழா ஒரு குடும்ப நிகழ்ச்சி போல நடத்தியது சந்தோஷமாக இருந்தது…என்று கம்பீரமாகப் பேசி அமர்ந்தார் விஜயகுமார்.
இவரைத்தொடர்ந்து இயக்குநர் பிவாசு அவர்கள் நம்பியார் அவர்களை பற்றி பேசினார்….
எங்கப்பா அவரைத் தொடர்ந்து என் மாமனார் இவர்கள் நம்பியார் சாமிக்கு
ஒப்பனைக் கலைஞர்கர்களாக இருந்தது எனக்குப் பெருமை.எங்கப்பா
எம்ஜிஆர் நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தை தெலுங்கில் என்.டிராமராவ்-ஜெயசித்ராவை வைத்து தயாரித்தார்.தமிழில் நம்பியார் நடித்த கதாபாத்திரத்திற்கு நம்பியரியே தெலுங்கிலி அப்பா நடிக்க
வைத்தார்.ஜெயசித்ராவை இவரும் மற்ற வில்லன்களும் தவறாக பிகேவ் பண்ண முற்படும் போது என்.டி.ஆர்.இவர்களோடு சண்டை போடுவார்.எமோஷனில் என்டிஆர்..நம்பியாரை பயங்கரமாக தலையில்
அடித்து விட்டார்.ஆக்சிடெண்ட் ஆகி நம்பியார் அவர்களை ஆஸ் பத்திரியில் சேர்த்து விட்டார்கள்.விஷயத்தைக் கேள்விப்பட்ட எங்கப்பா விரைந்து புறப்பட்டு ஆஸ்பத்திரியில் தலையில் கட்டோடு இருந்த நம்பியாரைப் பார்த்ததும் அதிர்ந்து போய் நின்று விட்டார்.அந்த நேரத்திலேயும் நம்பியார் சாமி ஜாலியாக ஹியூமராக “ஏம்ப்பா..என்னை ஆளை வெச்சு அடிக்கறதுன்னா
வேற யாரையாவது வெச்சு அடிச்சிருக்கலாமே…இவ்வளவு பெரிய ஹீரோவா கூட்டிக்கொண்டு வந்து …இவ்வளவு பெரிய சம்பளம் கொடுத்து என்னை அடிச்சுட்டியே…இது நியாயமா..”என்றதும் அந்த இடமே கலகலப்பானதாம்.இதை எங்க அப்பா அடிக்கடி எல்லார்கிட்டயும் சொல்லி சொல்லி சிரிப்பார்.

பாக்யராஜின் ‘தூறல் நின்னு போச்சு’ படத்திற்குப் பிறகு நம்பியார் என்னோட ‘சேதுபதி ஐ.பி.எஸ்.படத்தில் நடித்தார்.அவருக்கு கிளிசரின் போட்டு அழ வச்சு நடிக்க வெச்சது நான்தான்.அவர் வில்லனாகவே கோபத்தோடு பேசியே பழக்கம்.இந்தப் படத்தில் நல்ல கேரக்டர்.படத்தோட
விநியோகஸ்தர்களிடம் இவருக்கு நல்ல பெயர்.ஹீரோ யார் நடிச்சுருந்தாலும் நம்பியார் இருந்தால் படம் ஹிட்டுன்னு சொல்லி படத்தை வாங்குவாங்க.எம்ஜிஆர்-நம்பியார் நட்ப்பிற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம்….எம்ஜிஆர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் தன்னோட ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்றவர்தான்…எம்ஜிஆரின் உடல் அடக்கம் செய்தபிறகுதான் ரூமை விட்டு வெளியே வந்தார்,.அதுவரையில் ஒரு சொட்டு தண்ணீர் கூடக் குடிக்கவில்லை…அதுதான் நட்பு….அதுதான் பாசம்.நாணயத்தில் ஒருபக்கம் தலை எம்.ஜி.ஆர். என்றால் மறுபக்கம் பூ நம்பியார்.

இவர் பயங்கர வில்லன்..ஐம்பது ரேப் சீன்…நூறு சதித்திட்டம்
இப்படியெல்லாம் நடித்தவர் பெண்கள் மனதிலும் இடம் பிடித்திருந்தார் என்பதற்கு சாட்சி
‘அவருடைய மரணத்தின் போது இரண்டாயிரம் பெண்கள் மயானம் வரையில் வந்தார்கள் ..இதை நான் கண்கூடாகப் பார்த்து வியந்து போனேன்…என்று பேசினார் இயக்குநர் பி.வாசு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS