எம்.என்.நம்பியார் ஒரு ஆன்மிக ஹீரோ– இளையராஜா பெருமிதம்..!!எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-2

எம்.என்.நம்பியார் ஒரு ஆன்மிக ஹீரோ– இளையராஜா பெருமிதம்..!!எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-2

எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-2-)

எம்.என்.நம்பியார் ஒரு ஆன்மிக ஹீரோ–இளையராஜா பெருமிதம்..!

எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாவில் (19-11-2019 ) இளையராஜா பேச்சு…!!!

பலரும் வாழ்க்கையையே நடிப்பாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் நடிப்பை நடிப்பாக மட்டும்செய்து கொண்டு ஆன்மிகவாதியாக திகழ்ந்தவர் நம்பியார்.இந்த உலகத்தில் யாராக இருந்தாலும் நிலத்தில்தான் நடக்கவேண்டும்.காற்றைத்தான் சுவாசிக்க வேண்டும் .நிலத்தில் விளைவதையே உண்ணவேண்டும்.ஆண்டவனின் வடிவமைப்பு அப்படி.அப்படிப்பட்ட ஆண்டவனை ஐயப்பனாக நினைத்து வழிபட்டவர் நம்பியர்ஸ்வாமி.1980-இல் அவரிடம் மாலை போட்டுக்கொண்டு நானும் சபரிமலைக்கு சென்றேன்.இதுவரை மூன்று முறை சென்றுள்ளேன்.வேலை காரணமாக தொடரந்து செல்ல முடியவில்லை.சபரிமலைக்கு செல்லும் வழியில் தேக்கடி பகுதியில் எனக்கு சொந்தமான ஓர் ஓய்வு விடுதி உள்ளது.சபரிமலைக்கு செல்லும்போது பலமுறை தன் குழுவினர்களோடு நம்பியார் சுவாமி
அந்த விடுதியில் தங்கி செல்லும் விஷயமே எனக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிய வந்தது.அந்த புண்ணியம்தான் அந்த இடம் இன்று வேத பாடசாலையாக மாறியுள்ளது.இந்தியாவின் பல மாநிலத்திலிருந்து நான்கு முதல் பனிரெண்டு வயது வரையிலான மாணவர்கள் வந்து தங்கி வேதங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.அதற்கான வேத குருமார்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

சினிமாத் துறையில் உள்ள பலரையும் அந்தப் புனிதப் பயணத்தில் இணைத்துக்கொண்டு பயணித்தவர்.வில்லனாக நடித்தாலும் கெட்டவனாக
நடித்தாலும் நடிப்பை நடிப்பாகத்தான் அவர் பார்த்திருக்கிறார்,.நடிக்கும் போதும் அவர் ஆன்மிகவாதியாகத்தான் முழுக்க முழுக்க இருந்திருக்கிறார்.வாழ்க்கையையே பலர் நடிப்பாக
நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர் நடிப்பை நடிப்பாக மட்டும் காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நமக்கான வாழ்க்கைப் பாடத்தில் அவர் ஒரு ஆன்மிக ஹீரோ.தொழில் வேறு
,வாழ்க்கை வேறு என பிரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டியவர்.ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார் என்று சொன்னார்கள்,.விட்டிருந்தால் மூவாயிரம் படங்கள் பண்ணியிருப்பர் அதற்குள் ஐயப்பன் அழைத்துக்கொண்டுவிட்டார்.அவர் ஐயப்பனோடு ஐக்கியமாகி விட்டார்.அவரோடு பழகிய நாட்கள்,பழகிய அனுபவங்கள் எல்லாம் மறக்க முடியாதவைகள்…நான் செய்த பாக்கியங்கள்.இது போன்ற விழாவை நான் இது வரையில் பார்த்ததே இல்லை.இவ்விழாவை எடுத்து நடத்திய அவரின் குடும்பத்தார்களுக்கும் ,விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஐயப்பன் நீண்ட ஆயுளைக் கொடுக்க பிரார்த்திக்கிறேன்..”என்று இனிமையாகப் பேசினார் இளையராஜா.

 

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS