சுத்தமான மனிதராய் வாழ்ந்து காட்டியவர் நம்பியார்-நடிகர் ராஜேஷ் பேச்சு..!எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-5

சுத்தமான மனிதராய் வாழ்ந்து காட்டியவர் நம்பியார்-நடிகர் ராஜேஷ் பேச்சு..!எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-5

எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாவில் (19-11-2019 )நடிகர் ராஜேஷ்.. ‘நம்பியார்’ பற்றி பேசியதிலிருந்து ...எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-5

சுத்தமான மனிதராய் வாழ்ந்து காட்டியவர் நம்பியார்-நடிகர் ராஜேஷ் பேச்சு…

ஒரு படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் நம்பியார் சாமியோடு பேசிக்கொண்டிருந்தபோது :”இவ்வளவு ஒழுக்கமா இருக்கிறீர்களே…இது எப்படி உங்களால் முடிகிறது என்றேன்
“நீங்க நினைக்கிறாமாதிரி நான் கஷ்டப்பட்டெல்லாம் இருக்கிறது இல்லை .
உங்களுக்கு அப்படி தெரியலாம்…நான் சாதாரணமாத்தான் இருக்கேன் என்றார். சின்ன வயசுல ஒல்லியா இருப்பாராம் அதைப்பார்த்துட்டு எதிர் வீட்டில் இருந்த நம்பூதிரி தினமும் இவருக்கு பால் கொடுத்து சாப்பிடச்சொல்லுவாராம்.12 வயசு வரைக்கும் தான் பால் குடிச்சாராம் .அதற்குப் பிறகு பால் குடிக்கிறதையே நிறுத்திட்டாராம்.பால் அசைவம் ,மாட்டோட ரத்தம் அப்படின்னு முடிவு பண்ணி நிறுத்தினாராம்.
கேரள தமிழ் நாட்டோட உணவு ஐட்டங்களைத்தான் சாப்பிடுவாராம்.இம்போர்ட்
ஐட்டங்களைத் தொடவே மாட்டாராம்.முந்திரிப்பருப்பு-மிளகாய் இவை இரண்ண்டு போர்த்து கீசியர்த்தும்பார், புளி…அது அரேபியன் காரனோடதும்பார்.வெள்ளைப்பூண்டு,ஐஸ்கீரிம்,கேக்,முட்டை,ஓவல்,
போன்விட்டா ,ஹார்லிக்ஸ்,மசாலா பட்டை, இதையெல்லாம் சாப்பிடமாட்டாராம்.

உங்க ஆரோக்கியத்திற்கு என்ன காரணம் என்று கேட்டேன் அதுக்கு அவர் …நாப்பது அம்பது வருஷமா என்னோட குக்கை(சமையல்காரரை)
மாற்றவேயில்லைன்னார்.உடனே நான் ஆச்சரியத்தோடு யார் சார் அந்த குக்குன்னு கேட்டேன்..என்னோட மனைவின்னார்.

வெளியில் எங்குமே சாப்பிடாத நம்பியார் எம்ஜிஆர் வேண்டுகோளுக்கு இணங்க எம்ஜிஆர் அவர்களின் கடைசிகாலகட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில் அவரோடு அமர்ந்து சாப்பிட்டாராம்.கடைசி காலம் வரை நம்பியார் தனது தலைக்கு டை அடித்ததே இல்லை.உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமான சுத்தமான மனிதராய் கடைசி காலம் வரை….வாழ்ந்து காட்டியவர் ..”என்று பேசி முடித்தார் ராஜேஷ்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS