
நியூஸ் 7தமிழ் தொலைகாட்சியில் “நியூஸ் கராத்தே’..!!
நியூஸ் 7தமிழ் தொலைகாட்சியில் “நியூஸ் கராத்தே”..!!
நாள் தோறும் நடைபெறும் செய்திகளை நையாண்டி பாணியில் வழங்கும் நிகழ்ச்சி “நியூஸ் கராத்தே”.திங்கள் முதல் வெள்ளி வரை இரவு10:30 மணிக்கு நியூஸ் 7தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது .
இந்த ஜாலி கேலி நிகழ்ச்சியில் நான்கு பகுதிகள் உள்ளன.இந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் ஆகியோர் மைக் பிடித்து ஆற்றும் சொற்பொழிவை தொகுத்து தெறிக்கவிடும் ‘மைக்’கில் ’டாக்’சன் பகுதி காண்போரின் சிரிப்புக்கு கேரண்டி . இதனையடுத்து வருவது தொலைக்காட்சி விவாதங்களில் நடைபெறும் சண்டைகளை எடுத்து பஞ்சாயத்து பண்ணும் பைட் கிளப் என்கிற சுவாரஸ்யமான பகுதி. சமூக வலைதளங்களில் நடைபெறும் சண்டைகள், சர்ச்சைகள், சம்பவங்களை கலந்துகட்டி அடிக்கும் WTF பகுதியும் ,உள்ளூர் ஆளுமைகளின் குரலை உலக தலைவர்களின் பேச்சுடன் பொருத்தும் கிராஸ் டாக் பகுதியும் நேயர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை வேல் பிரசாந்த் தொகுத்து வழங்க அபுல் கலாம் ஜெய்லானி தயாரித்து அளிக்கிறார்.
TAGS abul kalamjailaaniNews 7 Tamil TV Program .... 'News Karate' .. !!!veal prasathஅபுல் கலாம்ஜெய்லானிவேல் பிரசாந்த்