இறப்பதற்கு முன்பாக பரவை முனியம்மா தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை..!! 

இறப்பதற்கு முன்பாக பரவை முனியம்மா தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை..!! 

இறப்பதற்கு முன்பாக பரவை முனியம்மா தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை..!!

தமிழ் திரைப்பட நடிகையும் கிராம பாடல்களை பாடும் பாடகியுமான பரவை முனியம்மா 29-3-2020 அன்று
அதிகாலை முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா, அதன்பின் திரையுலகினரின் நிதி உதவியால் குணமாகி வீடு திரும்பினார்.இந்த நிலையில் அவர் 29-3-2020 அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

விக்ரம் நடித்த தூள் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல’ என்ற பாடலை பாடி தமிழகம் முழுவதும் பிரபலமான பரவை முனியம்மா, அதன் பின்னர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பாடல்களை பாடி மகிழ்வித்து உள்ளார். இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ பட்டம் வழங்கி கெளரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவற்ற இவருக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ரூபாய் 6 லட்சம் வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தினார். மேலும் அவருடைய தேவைக்காக மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்கி வந்தார்.

இந்த நிலையில் பரவை முனியம்மா அரசாங்கம் எனக்கு கொடுத்த உதவித்தொகையை நான் இறந்த பின்பு மாற்றுத்திறனாளியான என்னுடைய மகனுக்கு அளித்து அவன் வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பரவை முனியம்மாவின் இந்த கோரிக்கையை ஏற்று அரசு நிறைவேற்றுமா?

CATEGORIES
TAGS
Share This

COMMENTS