
ரஜினியை நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ்…!!!
ரஜினியை நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ்…!!! 
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், தன்னம்பிக்கையால் தனது வாழ்க்கையில் வீறு நடைபோட்டு வருகிறார். பட்டப்படிப்பை முடித்த இவர், ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கி வருகிறார் பிரணவ்.
சமீபத்தில் கேரளப் பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துக் கொடுத்தார் பிரணவ். அப்போது, பினராயி விஜயனுடன், பிரணவ் எடுத்த செல்பி நாடு முழுவதும் வைரலானது. தற்போது போயஸ் கார்டன் இல்லத்தில் 2-12-2019 அன்று மாலை 5.30 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார் பிரணவ்.

அவரிடம் எதிர்கால லட்சியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினி கேட்டறிந்திந்திருக்கிறார். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட ரஜினி, `எல்லாமே நல்லபடியா நடக்கும் என்று கூறியிருக்கிறார். அப்போது ரஜினிக்காக தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பிரணவ் வழங்கினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. பின்னர் ரஜினியுடன் செல்பி ஒன்றையும் பிரணவ் எடுத்துக் கொண்டார்.
TAGS oviyar piranavPhysically handicapped artist Pranav meet Rajini and rajiniPhysically handicapped artist Pranav meet Rajini and rajini is a meltdownrajini meet piranavRajini-invites-Pranav-at chennai homeரஜினியை நெகிழ வைத்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ்...!!!