விமர்சனம்

பிரான்மலை -சினிமா விமர்சனம்..!!

பிரான்மலை -சினிமா விமர்சனம்..!!

நாயகன் ஆதவா பாண்டியன் பிரான்மலையில் வசித்து வருகிறார் . சிறு வயதிலேயே அம்மாவை இழந்ததால், அப்பா வேல ராமமூர்த்தியின் வளர்ப்பில் வளர்கிறார்.
வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்து வரும் வேல ராமமூர்த்தி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.ஆனால் ஆதவா பாண்டியன் இதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார்.
பெற்றோரை இழந்து ஆசரமத்தில் வளர்ந்து வருகிறார் நாயகி நேகா. ஒருநாள் ரோட்டில் ஆதரவின்றி இருக்கும் பெரியவர் ஒருவரை குளிப்பாட்டி தயார் செய்து விடும் நேகா மீது ஆதவா பாண்டியனுக்கு காதல் வருகிறது.ஊருக்குள் ஆதவா பாண்டியன் செய்யும் சேட்டைகள் அதிகமாவதால் அவரை வெளியூரில் சென்று வேலை பார்க்கும்படி அனுப்பி வைக்கிறார் வேல ராமமூர்த்தி. இதையடுத்து கோயமுத்தூர் செல்லும் ஆதவா, தனது நண்பன் பிளாக் பாண்டியுடன் தங்குகிறார். மேலும் கோவையில் நாயகியை பார்த்துவிடுகிறார்.ஒரு கட்டத்தில் ஆதவா – நேகா இருவருக்கும் இடையே காதல் வளர்கிறது. விடுதியில் ஏற்படும் ஒரு பிரச்சனையால், பாதிரியார் ஒருவரின் ஆலோசனையில் பேரில் வீட்டிற்கு தெரியாமல் நேகாவை, ஆதவா திருமணம் செய்து கொள்கிறார். அதேநேரத்தில் வேல ராமமூர்த்தி வேறு உறவுக்கார பெண்ணை பார்த்து வைக்கிறார்.
கடைசியில், தனது மகன், மருமகளை வேல ராம மூர்த்தி ஏற்றுக் கொண்டாரா? ஆதவா – நேகாவின் வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
2015-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு இப்போது கடைசியாக 2018-ம் வருடம், மூன்றாண்டு கால இடைவெளிக்குப் பின்பு இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. வருடக் கடைசியில் வந்திருக்கும் படம்…என்பதை அறிந்து தேடிப்பிடித்து சென்று தியேட்டரில் படம்பார்த்த போது..”குறைகளைக் கூறி விமர்சனம் செய்வதைவிட…விமர்சனம் எழுதாமல் விட்டு விடுவதே மேல் என்று தோன்றியது.
பிரான்மலை பட தயாரிப்பாளருக்கும்…இயக்குநருக்கும்,நடிகருக்கும்…அன்பான வேண்டுகோள்…இனி படம் எடுத்தால்…நல்ல கதையம்சமுள்ள படத்தை எடுத்து ஜனங்களுக்குப் புரியும்படி….பிடிக்குக்கும்படி ,நல்ல அனுபவம் வாய்ந்த இயக்குநரை உதவிக்கு வைத்துக் கொண்டு படத்தை எடுங்கள்.இப்படி எல்லோரையும்…..கஷ்டப் படுத்தாதீர்கள். 

 

Tags
Show More

Related Articles

Close