சைக்கோ கதையில் பிரபுதேவா..!!

சைக்கோ கதையில் பிரபுதேவா..!!

சைக்கோ கதையில் பிரபுதேவா..!!

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார். காதலர் தினத்தன்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரபுதேவாவின் நெற்றியில் மூன்றாவது கண் இருப்பது போல் தோற்றம் அமைந்துள்ளது.இந்த படம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், பிரபுதேவா குலேபகாவலி படத்தில் நடிக்கும் போதே இந்த கதையை சொன்னேன். அதன் பிறகு பாலிவுட் படங்களை இயக்க சென்றுவிட்டார். அந்த படங்களை முடித்த கையோடு வந்து பஹிரா படத்தில் நடித்து கொடுத்தார். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இது ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம். இதுவரை பார்த்திராத பிரபுதேவாவை இந்த படத்தில் பார்க்கலாம்….

“பஹிரா” என்ற இத்தலைப்பு பிரபல காமிக் கதையில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயர் ஆகும். “தி ஜங்கிள் புக்” காமிக் கதையில் வரும் ஒரு கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. அந்தக்கதையில் வரும் நாயகன் பாத்திரமான  மோக்ளியை பாடுபட்டு காப்பாற்றும் கருஞ்சிறுத்தையின் பெயர் தான் பஹிரா. இப்படத்தில் பிரபுதேவா சாரின் கதாப்பாத்திரம் இந்த குணநலன்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு அரணாக, காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கதாப்பாத்திரம் அவருடையது, அதனால் தான் இந்தப்பெயரை வைத்தோம்…என்றார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS