சைக்கோ=சினிமா விமர்சனம் ..!!

சைக்கோ=சினிமா விமர்சனம் ..!!

சைக்கோ=சினிமா விமர்சனம் ..!!

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் ‘சைக்கோ’ படத்தை தயாரித்துள்ளார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், இப்படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பார்வையற்றவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவை ஒருதலையாக காதலித்து வருகிறார். அவர் வாழும்
ஊரில் பெண்கள் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது சைக்கோ கொலையாளியின் கைவரிசையாக இருக்கலாம் என தெரியவந்தது.
இறுதியில் சைக்கோ கொலையாளியிடம் இருந்து அதிதி ராவை உதயநிதி உயிருடன் மீட்டாரா? சைக்கோ கொலையாளி யார்? எதற்காக பெண்களை கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி, தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பார்வையற்றவராக இவரின் நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சக்கர நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு நடிப்பால் மிரட்டி இருக்கிறார் நித்யா மேனன். துணிச்சலான கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். உதயநிதிக்கு கண்ணாக அவருடனே பயணித்திருக்கும் சிங்கம் புலியின் நடிப்பு சிறப்பு.இயக்குனர் ராம் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.சைக்கோவாக மிரட்டியுள்ளார் ராஜ்குமார்.

தனக்கே உரிய கிரைம், திரில்லர் பாணியில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்து, சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

படத்திற்கு பலம் இளையராஜாவின் இசை. பாடல் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. அதுபோல் தன்வீர் மிரின் ஒளிப்பதிவும் அருமை.

மொத்தத்தில் ‘சைக்கோ’ =நாயகனுக்கும் சைக்கோ கொலையாளிக்கும் இடையேயான மோதல் தான் கதை என்றாலும் மிஷ்கின் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS