செய்திகள்தமிழ் செய்திகள்

தாயாரை பாட வைத்து அழகு பார்த்த ராகவா லாரன்ஸ்…!!,-Raghava-Lawrence-mother-Sung-Song..and saw the beauty of the mother

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன் தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் துவங்கியுள்ளார்.
தங்கள் பெற்றோர்களை யாரும் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இனி எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்பதற்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். 
அன்னையர் தினத்தை(12-5-2019) முன்னிட்டு இப்பாடலை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்.

இவ்விழாவில்..”எங்க அம்மா நல்லா பாடுவாங்க….என்று கூறியபடியே லாரன்ஸ் மைக்கை அவர்கையில் கொடுத்தார்…அவர் மைக்கை கையில் வாங்கியதும் “செல்லாதா…செல்ல மாரியாத்தா..”என்ற பாட்டை தட்டு தடங்கல் இல்லாமல் பாடி அசத்தினார்..உடனே அருகில் இருந்த இசையமைப்பாளர்…உங்க அம்மா இவ்வளவு நல்லா பாடுவாங்கன்னு தெரியாது…அடுத்த படத்தில் அம்மா பாடுவதற்கு சான்ஸ் தருகிறேன் என்றார்.உடனே லாரன்ஸ்..அம்மா நீங்கள் அடுத்த படத்தில் பாடுவதற்கு உங்களுக்கு சான்ஸ் கிடைச்சுடுச்சு
அம்மா என்றதும்…துள்ளிக்குதித்து வெக்கப்பட்டார் லாரன்ஸின் தாய்.

செல்போனுக்கு தரும் முக்கியத்துவதைக்கூட
சிலர் அம்மாவுக்கு கொடுப்பது கிடையாது.அம்மா இறந்த பின்னால் வருத்தப்படுவதற்கு முன் இருக்கும் போதே பேசி மகிழ்ந்து வாழுங்கள்.நான் இந்த அமைப்பை ஆரம்பித்ததற்கும்….இந்தப்பாடலைக் கேட்ட பிறகும்
யாரவது ஒருவர் தனது தாயை ஆசிரமத்திலிருந்து வீட்டிற்கு
அழைத்து வந்தாலே அது எனக்கு பலனாக இருக்கும்.எனக்கும் அம்மாவிற்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆசிரமங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு நல்ல சாப்பாட்டை போடப்போகிறோம்
பல கோவில்களுக்கெல்லாம் அழைத்துச்செல்லப்போகிறோம்….என்றார் லாரன்ஸ்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close