ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி:-சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்த அறிவிப்பு …!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி:-சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்த அறிவிப்பு …!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி:-சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்த அறிவிப்பு …!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டி உள்பட ஒருசில இடங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் அரசின் அனுமதி கிடைத்ததும் மிக விரைவில் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட ஏற்கனவே திட்டமிடப்பட்டு நிலையில் தற்போது கொரோனா காலதாமதம் காரணமாக இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ‘அண்ணாத்த’ திரைப்படம் பொங்கல் 2021ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு பொங்கல் ரஜினியின் பொங்கலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் ’பேட்ட’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS