சண்டிமுனி-சினிமா விமர்சனம்..!!

சண்டிமுனி-சினிமா விமர்சனம்..!!

சண்டிமுனி-சினிமா விமர்சனம்..!!

மனைவியும் பெற்றோரும் ஒரு விபத்தில் மரணமடைந்த நிலையில், தனியாக வாழ்ந்துவருகிறார் நட்ராஜ். அவர் வசித்து வரும் வீட்டில் பேய் இருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் தகவல் பரப்புகிறார். அப்பகுதி மக்களும் அது உண்மை என்று நம்பத் தொடங்குகின்றனர். ஆனால் நட்ராஜ் இதனை நம்ப மறுக்கிறார்.

இந்த சூழலில் பள்ளியொன்றில் பணியாற்றும் மனிஷா செல்லும் இடமெல்லாம் பேய்கள் விடாது துரத்துகின்றன. இதற்கு தீர்வு காண மனிஷாவின் குடும்பத்தினர் ஒரு சாமியாரைச் சந்திக்கின்றனர். அவர் சொல்லும் தீர்வினால், மனிஷாவும் நட்ராஜும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். காதல் மலர்கிறது. அதுவே, அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கக் காரணமாகிறது.இதன்பின்னர், நட்ராஜின் கண்களுக்கும் பேய் தென்படத் தொடங்குகிறது. அந்த பேய் மனிஷாவைக் கொல்ல முயற்சிக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடையும் நட்ராஜ், மனிஷாவை விட்டு பேய் விலக என்ன செய்தார்? அந்த பேய் யார் என்பதை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சண்டிமுனி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்ராஜ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் .காஞ்சனா  படத்தில் லாரன்ஸ் செய்வது போல், பேய் தன்னுள் புகுந்ததும் பெண் போல் நட்ராஜ் நடித்துள்ள காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நாயகி மனிஷா யாதவ் தாமரை, ராதிகா என இரு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இரு கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடிப்பில் வித்யாசம் காட்டி இருக்கிறார்.சாம் நகைச்சுவை பகுதி ரசிக்கும் படி இருந்தது. வாசுவிக்கரம்,காதல்சுகுமார்,

ஆர்த்திபோன்றோர்கள் வந்து போகிறார்கள் அவ்வ்வளவுதான்.

யோகிபாபு பிளாஷ்பேக் காட்சியில் மட்டும் வந்து தலையை காட்டிவிட்டு செல்கிறார். ஒருவர் மீது கொண்ட அன்பு மரணமடைந்த பின்னும் தொடரும் என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார்(?).. இயக்குநர் மில்கா எஸ் செல்வகுமார், ..

இசை ஏ.கே.ரிஷால்சாய் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி பேய் படம் பார்க்கிறோம் என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.இருந்தாலும் ஓரளவு மெனக்கெட்டுயிருக்கிறார்.
,செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவில்  செமையாக மெனக்கட்டு இருப்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

மொத்தத்தில் ‘சண்டிமுனி’-பயங்கர முனியல்ல..சமத்து முனி ..

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS