சிவகார்த்திகேயன் – வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்..!!

சிவகார்த்திகேயன் – வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்..!!

சிவகார்த்திகேயன் – வைரலாகும் ‘டாக்டர்’ பர்ஸ்ட் லுக்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டாக்டர் என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான 17-2-2020 அன்று ‘டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த சிவகார்த்திகேயனின்
‘டாக்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்..போஸ்டர் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS