பேர் கிரில்ஸ்க்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்!

பேர் கிரில்ஸ்க்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்!

பேர் கிரில்ஸ்க்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (27-1-2020) ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு (27-1-2020)மாலையுடன் முடிவடைந்து அன்றிரவே அவர் சென்னை திரும்பினார்.

ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் பேர்கிரில்ஸ் பகிர்ந்த புகைப்படங்கள்(28-1-2020) காலை முதல் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் மற்றும் குழுவினர்களுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ‘பேர் கிரில்ஸ் உடனான நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும், மறக்க முடியாத அனுபவத்தை தந்த பேர் கிரில்ஸ் மற்றும் டிஸ்கவரி சேனலுக்கு நன்றி என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS