ஆங்கில செய்திகள்செய்திகள்தமிழ் செய்திகள்

பணம் சம்பாதிக்க..சுரேஷ் சந்திர மேனனின் புது யோசனை..!!

பணம் சம்பாதிக்க..சுரேஷ் சந்திர மேனனின் புது யோசனை..!

ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என்று பன்முகம் கொண்டவர் சுரேஷ் சந்திர மேனன். நடிகை ரேவதியின் முன்னாள் கணவர்.
திரைப்படம் மற்றும் சீரியல் தயாரிப்பு, டாக்குமெண்டரி தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என்று கடந்த 40 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ‘காளிதாஸ்’, ’பொன் மாணிக்கவேல்’, ‘அடங்கமறு’, ‘லூசிஃபர்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவின் பல்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் சந்திர மேனன், சினிமாவை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். சென்னையின் முக்கிய பகுதிகளில் டிராபிக்கை கட்டுப்படுத்துவதற்கான சில யோசனைகளை காவல்துறைக்கு வழங்கி வருபவர், கண்டய்னர் மூலம் கிராமப் பகுதிகளில் கழிப்பிடம் கட்டிக்கொடுத்திருக்கிறார். இப்படி பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசுக்கும் அரசு துறையை சார்ந்த அமைப்புகளுக்கும் வழங்கி வரும் சுரேஷ் சந்திர மேனன், தற்போது இளைஞர்கள் நமது நாட்டை பற்றியும், கலாச்சாரத்தை பற்றியும் அறிந்துக் கொள்வதற்காக மொபைல் ஆப் மூலம் வினா விடை போட்டியை தொடங்கியுள்ளார்.

இதற்காக ‘மை கர்மா’ (My Karma App) என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறார். இதில் விளையாடுவதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதோடு, வெற்றி பெறும் ஒவ்வொரு கட்டத்திலும் பரிசாக பணம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மை கர்மா மொபைல் ஆப் பற்றி சுரேஷ் சந்திர மேனன்,கூறுகையில்….
“மை கர்மா ஆப்பை உருவாக்க முக்கிய காரணம் இந்த தலைமுறைக்கு பொது அறிவை பற்றிய புரிதலோ, ஈடுபாடோ இல்லை. அவர்களை ஈர்க்க மொபைலில் இந்த மாதிரி ஒரு ஆப் உருவாக்க நினைத்தேன். முழுக்க முழுக்க இது மொபைல் யுகம். ஆப் தான் எதிர்காலம். அதனால் தான் இதை தேர்ந்தெடுத்தேன். இதில் எனக்கும் பயனாளிக்கும் மட்டுமே நேரடி தொடர்பு. நடுவில் எந்த ஏஜண்டும் கிடையாது. மக்கள் டிஜிட்டல் மணியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொபைலை மட்டுமே உலகம் என நினைத்திருக்கிறார்கள். கர்மா என்பது தேசிய அளவில் தெரிந்த ஒரு வார்த்தை. அதனால் இந்த அப்ளிகேஷனுக்கு அந்த பெயரை வைத்திருக்கிறோம்.

இந்த க்விஸ் விளையாட்டில் கேள்விக்கு 4 சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இதை விளையாடுவதன் மூலம் தெரியாத விஷயங்களை கூட தெரிந்து கொள்ளலாம். Learn, Earn, Return என்பது தான் இந்த ஆப்பின் டேக்லைன். இரவு 7 முதல் 9 மணி வரை தினமும் இந்த விளையாட்டை விளையாடலாம்.
இதில் விளையாடி பொது அறிவை வளர்க்கலாம், பணம் சம்பாதிக்கலாம், பொது சேவை செய்யும் NGO அமைப்புகளுக்கு நீங்கள் உதவலாம். முதல் கட்டமாக அருணோதயா சேவை அமைப்புக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்.

90% கேள்விகள் இந்தியாவை பற்றியது தான். இதுவரை 4000 பேர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஒரு சில நண்பர்களின் பொருளாதார பங்களிப்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். ஒரு சில இளைஞர்கள் என்னுடன் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறோம்” என்றார் சுரேஷ் சந்திர மேனன்.
                                            =========================================

Actor and Director Suresh Chandra Menon launches ‘My Karma’ Mobile App…!!

Celebrated as the multi-faceted personality of Tamil film industry, Suresh Chandra Menon has proved his proficiencyas an actor, cinematographer and producer across a span of 40 years. This evening, he interacted with Press and Media channels regarding a new App ‘My Karma’, which is a Quiz based Live Game Show. Here are some of the excerpts from the occasion. 

 

Addressing the Press and Media, Suresh Chandra Menon said, “I have been a part of film industry over the past 4 decades as a cinematographer, director and actor. I have produced lots of TV series and documentary films as well. After a long hiatus, I got back into acting after a long hiatus through series of movies like Thaana Serndha Koottam, Junga and have worked in movies like Adanga Maru, Malayalam movie ‘Lucifer’ directed by Prithviraj, Pon Manickavel and few more. 

 

I have always carried a passion for social activities apart from my involvement in showbiz. I have worked a lot in contributing towards societal benefits. This includes constructing a public restroom for women using the scrap ship container, which is put in use in a remote village of Tamil Nadu through the help of NGO.  I have given some ideas to Chennai Traffic Police, which has reduced the bottleneck congestions across many places in the city. I have been doing this out of public interest and not for the sake of monetary benefits. 

 

The main intention behind developing this App was to impart some General Knowledge about our country India. So, I decided to come up with something that will keep them engrossed through Mobile phones. It’s so much evident that the future is sure to be encircled with Cyber age and so chose ‘Mobile App’ as the medium. While people have started using Mobile App as their main sources of shopping, ticketing and almost everything from food and groceries, So, I felt this is the right way to execute ‘My Karma’ App. The reason behind naming this so is because ‘Karma’ is a common word beyond linguistic factors…

 

This ‘Quiz Game’ will have multiple choicebased questions through which we can inherit some interesting facts about our anthropological and historical facts about India. Just as the tagline of our App reads – Learn, Earn and Return, it engages users in gaining General Knowledge, earn money and contribute towards NGOs involved in philanthropic activities. As a first step towards this initiative, we are making our contributions towards Arunodhaya Trust. The game will be available everyday at three different slots of 7 p.m. 8 p.m. and 9 p.m. 

 

90% of the questions will be based on Indian history, culture and geography. So far, 4000 users have downloaded this App. We have developed this endeavour with the help of our few close friends. I am privileged youngsters half my age working alongside me and we are into lots of research for new innovative idea.”

 

 

 

Tags
Show More

Related Articles

Close