நடிக்க வேண்டியது விக்ரம்..ஆனால் நடித்துக் கொடுத்தது சூர்யா- வெளிவராத தகவல்..!!

நடிக்க வேண்டியது விக்ரம்..ஆனால் நடித்துக் கொடுத்தது சூர்யா- வெளிவராத தகவல்..!!

நடிக்க வேண்டியது விக்ரம்..ஆனால் நடித்துக் கொடுத்தது சூர்யா-
வெளிவராத தகவல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படமான 24 படம் பற்றிய வெளிவராத ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

24-படத்தை இயக்கிய இயக்குநர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்…..
24 படத்தின் கதையை முதலில் விக்ரமுக்காகத்தான் உருவாக்கினேன். விக்ரம் ஹீரோவாக நடிக்க இலியானா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

ஆனால் இறுதியில் இப்படம் கை கூடாமல் போய் விட்டது. அப்போது தான் சூர்யா தன்னுடைய “மனம்” என்ற படத்தை பார்த்து விட்டு அதனை கார்த்தி, ஜோதிகா ஆகியோரை வைத்து ரீமேக் செய்யலாம் என்று பேசினார்.

அந்த சமயத்தில்தான் நான் சூர்யாவுடன் இந்த 24 படத்தின் கதையை கூறினேன். படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே இந்த படத்தை முடித்துவிட்டு அந்த படம் பற்றி பேசலாம் என கூறினார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவெடுத்துள்ளேன். இது குறித்து சூர்யாவிடம் பேசி வருகிறேன். விரைவில் நல்ல செய்தி வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS